இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கக்கூடிய முகேஷ் அம்பானியின் சகோதரர் தான் அனில் அம்பானி. ஒரு காலத்தில் இவரும் இந்தியாவில் கொடி கட்டி பறந்த ஒரு நபராகத்தான் இருந்தார். ஆனால் இவருக்கு சொந்தமான நிறுவனங்கள் நஷ்டமடைந்த நிலையில் அவர் திவால் நிலைக்கு சென்றார்.
அனில் அம்பானியை பொருத்தவரை தன்னுடைய நிறுவனங்களை படிப்படியாக மீட்டு வருகிறார். அந்த வகையில் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரெக்சர் (Reliance infra) நிறுவனம் பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகிறது . ஜூன் 25ஆம் தேதி அன்று ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரெக்சர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அப்பர் சர்க்யூட் நிலைக்கு சென்றது.

ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரெக்சர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் டிபன்ஸ் ஜெர்மனியை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து பாதுகாப்பு மற்றும் வெடிபொருட்கள் சம்பந்தப்பட்ட 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி ஒப்பந்தத்தை பெற்று இருக்கிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து இந்திய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரெக்சர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அப்பர் சர்க்யூட் நிலைக்கு சென்றது.
ஜெர்மனியை சேர்ந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் பெற்றதன் மூலம் தங்களுடைய நிறுவனம் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட உபகரணங்கள் விற்பனையை ஐரோப்பிய சந்தைக்கும் கொண்டு சென்று இருக்கிறது என ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரெக்சர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு துறைக்கான பொருட்களை உற்பத்தி செய்வதில் தனியார் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரெக்சர் அதில் முக்கியமான ஒரு நிறுவனமாக உருவாகி வருகிறது.
ஜூன் 25ஆம் தேதி புதன்கிழமை அன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 4.9% வரை உயர்ந்து ஒரு பங்கின் மதிப்பு 404 ரூபாய் என அப்பர் சர்க்யூட் நிலைக்கு சென்றது. நேற்றைய தினம் இந்த பங்கின் மதிப்பு பங்குச்சந்தை முடிவடையும் போது 384 ரூபாயாக தான் இருந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஜெர்மனி நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தம் பெற்று இருப்பதாக அறிவித்த உடனேயே நண்பகல் 2. 46 மணியளவில் இந்த பங்கு மதிப்பானது உயர தொடங்கியது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரெக்சர் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 1049 சதவீத லாபத்தை தந்திருக்கிறது கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 93 சதவீத வருமானத்தை ஈட்டி தந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 26 சதவீதம் அதிகரித்து இருக்கிறது . இந்நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 16,000 கோடி ரூபாயாக இருக்கிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications