அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பவரின் துணை நிறுவனமான ரோசா பவர் இண்டஸ்ட்ரியல், வெர்டே பார்ட்னர்ஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ.485 கோடி கடனை திருப்பி செலுத்தியதன் மூலம், கடன் இல்லாத நிறுவனமாக மாறி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
ரோசா பவரின் இருப்புநிலை மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஈக்விட்டி இணைக்கப்பட்ட வாரண்ட்கள் முன்னுரிமை வெளியீடு ரூ. 1,525 கோடி மூலம் நிறுவனம் வலிமையான நிலையை அடைந்துள்ளது. இது ரிலையன்ஸ் பவர் வேகமாக வளர்ந்து வரும் சுத்தமான, பசுமையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வணிக வாய்ப்புகளைப் பெற உதவும்.

ரோசா பவர் சப்ளை கம்பெனி லிமிடெட் அதன் நிலுவையில் இருந்த கடனை ரூ.1318 கோடியை வெர்டே பார்ட்னர்களுக்கு முன்னதாக செலுத்தி முடித்து கொண்டது. முன்னதாக, ரோசா பவர் சிங்கப்பூரைச் சேர்ந்த கடன் வழங்கும் நிறுவனமான வெர்டே பார்ட்னர்களுக்கு ரூ.833 கோடியை முன்பணமாக செலுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் அருகே உள்ள ரோஜா கிராமத்தில் ரோஜா பவர் நிறுவனம் 1,200 மெகாவாட் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையத்தை இயக்குகிறது.
ரோசா பவரின் இருப்புநிலையை வலுப்படுத்துதல் மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஈக்விட்டி இணைக்கப்பட்ட வாரண்ட்கள் முன்னுரிமை வெளியீடு ரூ. 1,525 கோடியை ரிலையன்ஸ் பவர் வேகமாக வளர்ந்து வரும் சுத்தமான, பசுமையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வணிக வாய்ப்புகளில் இருந்து பயனடைய அனுமதிக்கும் என்று நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியது. இந்த முன்னுரிமை பங்கு வெளியீட்டில்,ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.11,155 கோடியில் இருந்து ரூ.12,680 கோடிக்கும் அதிகமாகும்.
ரிலையன்ஸ் பவர் பங்கு விலை: இன்று ரிலையன்ஸ் பவர் பங்குகள் 0.48% உயர்ந்து ஒரு பங்கிற்கு ரூ.43.90 ஆக வர்த்தகமாகின்றன. அதேசமயம் நாளின் தொடக்கத்தில் ஒரு பங்கு ரூ.41.80 ஆக இருந்தது. நவம்பர் 6ஆம் தேதி நிலவரப்படி, ரிலையன்ஸ் பவரின் சந்தை மூலதனம் ரூ.17,461 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் பவர் பங்குகள் நவம்பர் 6 வரை கடந்த ஓராண்டில் 125 சதவீத லாபத்தை அளித்துள்ளன. பங்குகளின் இரண்டு மற்றும் மூன்று ஆண்டு வருமானம் முறையே 158.75 சதவீதம் மற்றும் 203 சதவீதம் ஆக உள்ளது.
ரிலையன்ஸ் பவர் Q2FY25: ரிலையன்ஸ் பவரின் நடப்பு நிதியாண்டிற்கான அதன் இரண்டாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்க தயாராக உள்ளது. 2024-25 நிதியாண்டில், செப்டம்பர் 30, 2024 இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான பட்டியலிடப்படாத நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்க அதன் வாரியக்கூட்டம் நவம்பர் 12, 2024 செவ்வாய்கிழமை நடைபெறும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமான ரிலையன்ஸ் பவர் லிமிடெட் ஒரு இந்திய தனியார் துறை மின் உற்பத்தி மற்றும் நிலக்கரி வள நிறுவனமாகும்.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications