அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 160% மேலாக உயர்ந்து மல்டிபேக்கர் வருவாயை கொடுத்துள்ளன. கடந்த சில நாட்களாக முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றன. இதனால் பங்கு அடிக்கடி தொடர்ந்து அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகி வருகிறது. அந்த வகையில் இன்றும் நிறுவனத்தின் முக்கிய செய்தியால் அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் பவரின் பங்கு இன்று 5% உயர்வுடன் அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகி வருகிறது. பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.42.36 என்ற விலையில் வர்த்தகமாகி வருகின்றன. இந்த காலகட்டத்தில் அதன் சந்தை மதிப்பு ரூ.17.02 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நிறுவனம் முன்னுரிமை பங்குகளை வெளியிட்டு ரூ.1,524.60 கோடி திரட்ட பங்குதாரர்களின் ஒப்புதலை பெற்றுள்ளதாக ரிலையன்ஸ் பவர் தெரிவித்துள்ளது. நேற்று இரவு பங்குச் சந்தைக்கு அளிக்கப்பட்ட தகவலில், அஞ்சல் வாக்குச் சீட்டு அறிவிப்பு மூலம் தேவையான பெரும்பான்மையுடன் முன்மொழிவு நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 99.5% பங்குதாரர்கள் முன்னுரிமை வெளியீடு மூலம் 1525 கோடி திரட்ட ஆதரவாக வாக்களித்தனர்.
அஞ்சல் வாக்குச் சீட்டு அறிவிப்பின்படி, நிறுவனம் 46.20 கோடி ஈக்விட்டி பங்குகள் சமமான எண்ணிக்கையிலான ஈக்விட்டி பங்குகளின் கன்வெர்ட்டிபிள் வாரண்ட்கள் மூலம் ஒரு பங்கிற்கு ரூ.33 என்ற விலையில் ரூ.1,524.60 கோடி வரை திரட்டும் என கூறியுள்ளது.
ரிலையன்ஸ் பவர் லிமிடெட் வாரியம் செப்டம்பர் 23 அன்று முன்னுரிமைப் பங்குகளை வழங்குவதன் மூலம் ரூ.1,524.60 கோடியை திரட்ட ஒப்புதல் அளித்தது.நிறுவனத்தின் உரிமையாளரான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தனது பங்குகளை ரூ.604 கோடியை முதலீடு செய்யும். மீதமுள்ள ரூ.900 கோடி ஆனது மற்ற இரண்டு முதலீட்டாளர்களிடமிருந்து வரும். அதம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், மற்றும் சனாதன் ஃபைனான்சியல் அட்வைசரி சர்வீசஸ் ஆகியவை முன்னுரிமை வெளியீட்டில் பங்குபெறும் மற்ற முதலீட்டாளர்களாக இருக்கும்.
அதம் இன்வெஸ்ட்மெண்ட் ரூ.720 கோடியும், சனாதன் பைனான்சியல் ரூ.200 கோடியும் முதலீடு செய்யும். முன்னுரிமைப் பங்குகளில் ரிலையன்ஸ் பவரின் நிகர மதிப்பை ரூ.11,155 கோடியிலிருந்து ரூ.12,680 கோடியாக உயர்த்தும். இதனையடுத்து இந்த மேம்படுத்தப்பட்ட மூலதனமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நிறுவனத்தின் பங்களிப்பை அதிகரிக்கும்.
புதிய நிதிகள் நேரடியாக வணிக விரிவாக்கம் மற்றும் துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளில் முதலீடு, கடன் குறைப்பு மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் பவர் லிமிடெட் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் மல்டிபேக்கர் வருவாயை கொடுத்துள்ளன. கடந்த சில நாட்களாக பங்குகளில் நல்ல ஏற்றத்தால் நிறுவனம் அதன் கடனைக் குறைத்துள்ளது.
ரிலையன்ஸ் பவரின் புத்தக மதிப்பு ரூ.28.90 ஆக உள்ளது. அதாவது நிறுவனம் சொத்துக்களை உயர்த்தியுள்ளது. இதன் 52 வார அதிகபட்ச பங்கின் விலை ரூ.53.64 ஆகவும், 52 வாரத்தில் குறைந்த பங்கு விலை ரூ.15.55 ஆகவும் உள்ளது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications