இந்திய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் நீடித்த நிலையான வளர்ச்சியை பெற்று முதலீட்டாளர்களுக்கு லாபம் பெற்று தருகின்றன. அப்படி மிகப்பெரிய சரிவை சந்தித்த ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஒரு நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மல்டி பேக்கர் நிறுவனமாக மாறி இருக்கிறது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறித்து தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக ரிலையன்ஸ் குழுமம் செயல்பட்டு வருகிறது. இதனை நிறுவியவர் திருபாய் அம்பானி. இவரது மகன்கள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் ரிலையன்ஸ் குழுமத்துக்குட்பட்ட நிறுவனங்களை கண்காணித்து வருகின்றனர்.

இதில் தொடக்கத்தில் தொழிலில் ஜாம்பவானாக இருந்து பல்வேறு வெற்றிகளை குவித்தவர் தான் அனில் அம்பானி. ஆனால் பின்னாளில் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் திவாலாகி பெரும் கடனுக்கு ஆளானார். ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டன. பெரும் கடனுக்கு ஆளான அனில் அம்பானியால் மற்ற நிறுவனங்களையும் சரியாக நடத்த முடியவில்லை.
ஆனால் அனில் அம்பானி தற்போது அந்த கடன்களில் இருந்து எல்லாம் மீண்டு வந்து தனக்கு சொந்தமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனங்களை வீழ்ச்சியிலிருந்து மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்திருக்கிறார். அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃபிரா லிமிடெட் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை தந்த ஒரு மல்டி பேக்கர் பங்காக மாறி இருக்கிறது.
ரிலையன்ஸ் இன்ஃபிரா நிறுவனம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் இருந்து பீரங்கி வெடிபொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இதனை அடுத்து ஜூன் நான்காம் தேதி அன்று காலை 10 மணி அளவில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் இரண்டு சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 350 ரூபாய் என வர்த்தகமானது. ரிலையன்ஸ் இன்ஃபிரா நிறுவனத்தை பொருத்தவரை மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றிருக்கிறது.
குறிப்பாக புதிய தலைமுறை பீரங்கி வெடிப்பொருட்களை தயாரிக்கும் முக்கியமான ஒரு ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் இன்பிரா நிறுவனம் கைப்பற்றி இருப்பதே முதலீட்டாளர்களுக்கு அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்க காரணமாகியுள்ளது. இந்தியாவிலேயே நான்கு வகையான புதிய தலைமுறை 155 mm ஆர்ட்டைலரி வெடிபொருளை தயாரிக்கும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபிரா நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது.
இது மட்டுமின்றி ரிலையன்ஸ் இன்ஃபிரா நிறுவனம் கார்ப்பரேட் திவால் நிலை தீர்வு செயல்முறைக்கு செல்லலாம் என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மே 30ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை தற்போது டெல்லியில் அமைந்திருக்கும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஃபிரா நிறுவனத்துக்கும் துஷார் சோலார் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி ரிலையன்ஸ் இன்ஃபிரா செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. ரிலையன்ஸ் இன்ஃபிரா தங்களுக்கு 88 கோடி ரூபாய் தர வேண்டும் என கூறி துஷார் நிறுவனம் நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகியது. அதற்கு ரிலையன்ஸ் இன்ஃபிரா நிறுவனம் மீது கார்ப்பரேட் திவால் நிலை தீர்வு செயல்முறைக்கு செல்லலாம் என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மே 30ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தான் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயம் அந்த உத்தரவை ரத்து செய்து அனில் அம்பானி நிறுவனத்துக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. இந்த தகவல் வெளியானதை அடுத்து ஜூன் 4ஆம் தேதி மதியம் 3.10 மணி அளவில் ரிலையன்ஸ் இன்ஃபிரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10% உயர்ந்து 378 ரூபாய் என வர்த்தகமானது.
ரிலையன்ஸ் இன்ஃபிரா பங்கினை பொருத்தவரை கடந்த 2020 ஆம் ஆண்டு இதன் ஒரு பங்கின் மதிப்பு 10 ரூபாயாக இருந்தது. இதனை அடுத்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து தற்போது இதன் ஒரு பங்கு மதிப்பு 350 ரூபாய் என்ற அளவை எட்டி இருக்கிறது. 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3,500 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 35 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2008 ஆம் ஆண்டு 2485 ரூபாய் என்ற அளவில் இருந்தது. பின்னர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு பெருமளவில் வீழ்ச்சி அடைந்தது.
தற்போது ரிலையன்ஸ் இன்ஃபிரா மற்றும் ரிலையன்ஸ் பவர் ஆகிய நிறுவனங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பியுள்ளன. அனில் அம்பானி பொருத்தவரை தனக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன்களை குறைப்பதிலும் புதிய புதிய ப்ராஜெக்ட்களை பெறுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தான் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம் மத்திய அரசிடம் இருந்து பீரங்கி வெடிபொருட்களை தயாரிக்கும் ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றிருக்கிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெடிபொருட்களை ரிலையன்ஸ் நிறுவனம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் ரிலையன்ஸ் இன்ஃபிரா நிறுவனமும் இணை இருக்கிறது.
தற்போதைக்கு ரிலையன்ஸ் இன்ஃபிரா நிறுவனம் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரத்தினகிரி பகுதியில் மிகப்பெரிய வெடிபொருள் ஆலையை நிறுவ இருக்கிறது. ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவன பங்குகளில் சில்லறை முதலீட்டாளர்கள் 70 சதவீத பங்குகளையும், பிமோட்டர்கள் 16 சதவீத பங்குகளையும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 11 சதவீத பங்குகளையும் வைத்திருக்கின்றன.
ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்தை பொருத்தவரை கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 103 சதவீதம் உயர்வு தந்திருக்கிறது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 144 ரூபாய் 52 வார காலம் அதிகபட்ச மதிப்பு 359 ரூபாய் இந்த நிறுவன பங்கின் முக மதிப்பு 10 ஆகவும் புக் வேல்யூ 364.28 ஆகவும் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் என பார்க்கும் போது 2024 ஆம் ஆண்டில் 22,519 கோடி ரூபாய் என இருக்கிறது.
ரிலையன்ஸ் இன்ஃபிரா லிமிடெட் நிறுவனம் பொறியியல் மற்றும் கட்டுமான சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகவும் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது. மின்சார கட்டமைப்புகள் ,சாலை ,மெட்ரோ ரயில் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரும் நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது.
அனில் அம்பானியை பொறுத்தவரை தன்னுடைய வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு அவரது மகன்கள் ஜெய் அன்மோல் மற்றும் ஜெய அன்சுல் ஆகியோரும் உதவி செய்து வருகின்றனர். ஜூன் 3ஆம் தேதி அன்று அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 52 வார கால உச்சத்தை எட்டி ஒரு பங்கின் மதிப்பு 62 ரூபாயை கடந்து வர்த்தகமானது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications