இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனை நிறுவனமான அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் தனது பார்மசி மற்றும் டிஜிட்டல் ஹெல்த் வணிகங்களை தனியாக பிரித்து அதை ஓரே நிறுவனமாகவும், ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் மிகப்பெரிய மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் மருத்துவமனை வர்த்தகத்தையும், ரீடைல் வர்த்தகத்தையும் தனித்தனியாக பிரிக்கப்பட உள்ளது.
இந்த மறுசீரமைப்புக்கு பின் குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட முரண்பாடு, ப்ரோமோட்டர் அமைப்பில் நடந்த மாற்றம் தான் காரணம் என கருத்து நிலவி வந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இதை முற்றிலும் மறுத்துள்ளார் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி.

வர்த்தக பிரிப்புக்கான காரணம்
ஹாஸ்பிட்டல் மற்றும் பார்மசி-டிஜிட்டல் வணிகங்கள் முற்றிலும் மாறுப்பட்ட வர்த்தக பொருளாதாரம், லாப அளவுகள் மற்றும் வளர்ச்சி காரணிகள் கொண்டுள்ளவை. ஹாஸ்பிட்டல்ஸ் வணிகம் நீண்டகால முதலீடு மற்றும் நிலையான லாபத்தை தருவது. ஆனால் பார்மசி மற்றும் டிஜிட்டல் ஹெல்த் (அப்போலோ 24/7) ரீடைல் பிரிவை சார்ந்தது, மேலும் வேறுபட்ட ROCE (ரிட்டர்ன் ஆன் கேபிடல் எம்ப்ளாய்ட்) கொண்டது.
இந்த வேறுபாட்டால் இரு வணிகங்களையும் தனியாக பிரித்து நிர்வகிப்பது பங்குதாரர்களுக்கு அதிக மதிப்பை உருவாக்கி, லாபத்தை அதிகரிக்கும் என்று சுனிதா ரெட்டி விளக்கினார்.
குடும்ப பிரச்சனை - விளக்கம்
எக்னாமிக் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் சுனிதா ரெட்டி கூறுகையில், "அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தில் எடுக்கப்பட்டும் ஒவ்வொரு முடிவும் வணிகத்திற்கும், பங்குதாரர்களுக்கும் எது நல்லது என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த வர்த்தக மறுசீரமைப்பை குடும்ப கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்" என தெரிவித்தார். மேலும் தனது சகோதரி ஷோபனா கமினேனி உடன் தினமும் பேசுவதாகவும், இருவரும் நெருக்கமாக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.
ஐபிஓ நோக்கம்
அப்போலோ ஹெல்த்கோ லிமிடெட் (AHL) மற்றும் கீமெட் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அப்போலோ ஹெல்த்டெக் என்ற நிறுவனத்தில் ஒன்றாக இணைக்கப்படும். இதனால் பார்மசி விநியோகம் மற்றும் டிஜிட்டல் ஹெல்த் வணிகங்கள் ஒரே குடையின் கீழ் வரும்.
தனியாக பிரிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2027ஆம் ஆண்டில் பட்டியலிடப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இப்பிரிவு 20 சதவீத வளர்ச்சியும், ஹாஸ்பிட்டல்ஸ் வணிகம் 18 சதவீத வளர்ச்சியும் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இந்த முடிவு வணிகத்தின் திறனை அதிகரிக்கும் மற்றும் ஷேர் ஹோல்டர்களுக்கு நீண்டகால மதிப்பு உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட முரண்பாடு என்ற பேச்சுகளை நிறுவனம் மறுத்துள்ளது.
அப்போலோ மருத்துவனை பங்குவிலை
இன்று பங்குச்சந்தையில் அப்போலோ மருத்துவனையின் பங்கு விலை 0.25 சதவீதம் வரையில் உயர்ந்து 7310.50 ரூபாய் வரையில் உள்ளது. இதன் மூலம் அப்போலோ மருத்துவனை குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.05 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications