ஹோட்டல் பங்குகள் என்றாலே முதலீட்டாளர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது டாடா-வின் தாஜ் (Indian Hotel) தான். ஆனா 2026-ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு (Q3FY26) முடிவுகள், தாஜ் ஹோட்டலை தாண்டி கவனத்தில் கொள்ள வேண்டிய ஹோட்டல்களும் உள்ளதை நினைவு படுத்தியுள்ளது.
பெரிய பெரிய ஜாம்பவான்கள் ஒரு பக்கம் நிதானமா வளர்ந்து கொண்டிருக்க, யாருமே எதிர்பார்க்காத 3 மிட்கேப் ஹோட்டல் பங்குகள், சத்தமே இல்லாமல் லாபத்தை குவித்து கொண்டிருக்கின்றன. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் திருமண பருவம் உள்ளிட்ட பல்வேறு சாதகமான காரணிகள் மத்தியில் இந்த பங்குகள் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

அப்படி முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 பங்குகள் என்னென்ன? அவை எப்படி பெரிய அளவிலான வளர்ச்சியை சந்தித்துள்ளன, அடுத்தடுத்து வரும் விடுமுறை காலங்களில் இந்த பங்குகள் இன்னும் மேலே போகுமா? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன, வாருங்கள் பார்க்கலாம்.
லீலா பேலஸ் ஹோட்டல்கள்
இந்தியாவின் சொகுசு ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் ஒன்றான லீலா பேலஸ் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்ஸ், 1987ல் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். டெல்லியை தலைமையிடமாக கொண்ட இந்த ஹோட்டல் நிறுவனம், ஆரோக்கியமான நிதி நிலையையும் கொண்டுள்ளது. குறிப்பாக நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த வருவாய் வளர்ச்சியானது 23.5% அதிகரித்து, 457.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவிலான காலாண்டு வளர்ச்சியாகும். இந்த காலாண்டில் ஹோட்டல் அறைகள் ஆக்கிரமிப்பு விகிதமானது 71% ஆக காணப்பட்டது முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
முக்கிய செயல்பாட்டு காரணியான ஏடிஆர் (ADR) விகிதமானது, டிசம்பர் காலாண்டில் 30,337 ரூபாயாகவும் காணப்பட்டது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 17% அதிகமாகும். இருப்பினும் இந்த விகிதமானது இன்னும் ஆய்வில் உள்ளதாக கூறப்படுகிறது. செயல்பாட்டு லாப மார்ஜின் ஆனது 130 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 52.1% ஆகவும் அதிகரித்துள்ளது. இதே நிகர லாபம் 162.5% அதிகரித்து, 147.8 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இது அதன் வலுவான செயல்பாடுகளையே காட்டியுள்ளது. இது அதன் பங்கு விலை அதிகரிப்புக்கு காரணமாக அமையலாம்.
சாலெட் ஹோட்டல்ஸ் (Chalet Hotels)
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட சாலெட் ஹோட்டல்ஸ், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஒரு சுவாரஸ்யமான போக்கை கண்டுள்ளது. சொகுசு ஹோட்டல் நிறுவனமானது தொடர்ந்து தனது வலுவான செயல்பாடுகளுக்கு மத்தியில், கடந்த காலாண்டில் ஒரு அறையின் சராசரி வாடகை 14,970 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 12,944 ரூபாயாக இருந்தது. இது சுமார் 16% வளர்ச்சியாகும். ஆக்கிரமிப்பு விகிதமானது 68% ஆகவும் குறைந்துள்ளது. ஆக்கிரமிப்பு விகிதம் குறைந்திருந்தாலும், கூடுதல் அறைகள் வரவே இதற்கு காரணம் என கூறும் நிறுவனம், கண்டாலா பகுதியில் உள்ள புதிய திட்டத்தின் மூலம் புதிய அறைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ஹோட்டல் போர்ட்ஃபோலியோவில் 11 ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களையும் கொண்டுள்ளது. அதன் மூலம் 3,389 அறைகளையும் கொண்டுள்ளது. இதில் ஜே.எம் மரியாட், தி வெஸ்டின், நோவோடெல் உள்ளிட்ட பிராண்டுகளையும் கொண்டுள்ளது. இதனிடையே அதன் வருவாய் வளர்ச்சியானது 23.1% அதிகரித்து, 491.3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. லாபம் 17.4% அதிகரித்து, 175.6 கோடி ரூபாயாகவும் உச்சத்தை தொட்டுள்ளது. இது ஹோட்டல் வணிகத்தில் மட்டுமல்ல, தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் வருடாந்திர திட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இது அதன் எதிர்கால வளர்ச்சிக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கலாம்.
வெண்டிங் ஹாஸ்பிட்டாலிட்டி
புனேவை தலைமையிடமாக கொண்ட வெண்டிங் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனமானது, மற்ற பெரிய பெரிய நிறுவனங்களை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இவர்களின் சராசரி அறை வாடகை 14% உயர்ந்து, 24,573 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த ஹோட்டல் நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவில் 13 ஹோட்டல்கள் மற்றும் 2,718 அறைகளையும் கொண்டுள்ளது. அறைகள் குறைவாக இருந்தாலும், அதன் மூலம் ஈட்டும் வருமானம் அதிகம். இதன் ஆக்கிரமிப்பு விகிதமும் டிசம்பர் காலாண்டில் 64% ஆகும். இது முந்தைய காலாண்டை விட 2% அதிகமாகும்.
இதனிடையே அதன் வருவாய் வளர்ச்சியானது மூன்றாவது காலாண்டில் 28.5% அதிகரித்து, 685.4 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதே நிகர லாபம் 303.5% அதிகரித்து, 140.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. செயல்பாட்டு லாப மார்ஜின் 45.4% ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது.
என்ன செய்யலாம்?
தொடர்ந்து அடுத்து வரும் காலாண்டுகளுக்கு ஹாஸ்பிட்டாலிட்டி துறையானது, வலுவான வளர்ச்சியை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நடுத்தர ஹோட்டல்களும் வளர்ச்சி காணலாம் என்றும், இதன் மூலம் அவற்றின் செயல்பாடுகள் மேம்பட்டு, லாபம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் நடப்பு ஆண்டில் மேற்கண்ட மூன்று மிட்கேப் பங்குகளும் கவனத்தில் கொள்ளலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications