அர்ஜென்டீனா அதிபர் மொரிசியோ மேக்ரி எதிர்பார்க்காத வகையில் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசு பத்திரம் மற்றும் பங்குகளில் செய்திருந்த முதலீட்டை அதிரடியாகவும், அவசர அவசரமாகவும் வெளியேற்றியதால் அர்ஜென்டீனா அரசுடன் அந்நாட்டுப் பொருளாதாரமும் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதிபரின் அதிர்ச்சி தோல்வியால் திங்கட்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் இந்நாட்டின் பங்குச்சந்தையின் முக்கியக் குறியீடான merval சுமார் 48 சதவீதம் (டாலர் மதிப்பில்) சரிந்துள்ளது.
18 வருட வீழ்ச்சி
இது கடந்த 18 வருடத்தில் காணாத ஒரு வீழ்ச்சி என்றும் அர்ஜென்டீனா பொருளாதாரச் சந்தையில் பேசப்படுகிறது. இதோடு அதிபரின் தோல்வியின் எதிரொலியாக அதிகளவிலான அன்னிய முதலீடு வெளியேறிய காரணத்தால் இந்நாட்டின் நாணயமான பிசோ மதிப்பு 30 சதவீதம் வரையில் சரிந்து அர்ஜென்டீனா மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால் ஆண்டவன் (ஆழ்வார்பேட்டை ஆண்டவன் இல்லை) புண்ணியத்தில் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் இதன் சரிவு அளவீடு 15 சதவீதமாகக் குறைந்தது.
அரசு பத்திரங்கள்
பங்குச்சந்தை மற்றும் நாணய மதிப்பு சரிவின் காரணமாக இந்நாட்டின் அரசு பத்திரங்களின் மதிப்பு 25 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இதிலிருந்து மீண்டு வர அர்ஜென்டீனா-விற்கு மிகவும் கடினம்.
பணிநீக்கம், பணவீக்கம்
இதுமட்டும் அல்லாமல் அர்ஜென்டீனா-வில் தற்போது அதிகளவில் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதோடு முதல் 6 மாதத்தில் மட்டும் இந்நாட்டின் பணவீக்கம் 22 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை தொடர்ந்தால் அர்ஜென்டீனா-வை யாராலும் காப்பாற்ற முடியாது.
மொரிசியோ மேக்ரி 2018இல் பீசோ மதிப்பின் வீழ்ச்சியைச் சரி செய்யச் சர்வதேச நாணய நிதியத்திடம் சுமார் 55 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்தார். ஆனால் அது எவ்விதமான பயனும் அளிக்கவில்லை.
2வது இடம்
1989இல் இலங்கையில் போர் வெடித்த போது இலங்கை பங்குச்சந்தை சுமார் 62 சதவீதம் வரையில் சரிந்தது. இதுதான் சர்வதேச பங்குச்சந்தையில் மோசமான சரிவாகப் பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது அர்ஜென்டீனா-வின் 48 சதவீதம் வீழ்ச்சியைத் தான் மாபெரும் வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications