நேற்று மாலை சென்செக்ஸ் 41,558 என்கிற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்று காலை சென்செக்ஸ் 41,571 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,654 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய உச்சப் புள்ளி சுமார் 95 புள்ளிகள் தான் அதிகம் என்றாலும், இதுவும் ஒரு பெரிய இண்ட்ரா டே உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நிஃப்டி 12,223 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,252 எனும் உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,219 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 1,070 பங்குகள் ஏற்றத்திலும், 986 பங்குகள் இறக்கத்திலும், 162 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. 2,219 பங்குகளில் 45 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 79 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
நேற்று டிசம்பர் 18 அமெரிக்க சந்தை ஃப்ளாட்டாகவே வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதே போல லண்டன் பங்குச் சந்தையும் பெரிய ஏற்றம் காணாமல் ஃப்ளாட்டாகவே வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கின்றன.
இன்று வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் ஆசிய பங்குச் சந்தைகளில் எந்த பங்குச் சந்தையும் நல்ல ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதாகத் தெரியவில்லை. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி மட்டுமே ஓரளவுக்கு 0.13 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. தைவானின் தைவான் வெயிடெட் சந்தை அதிகபட்சமாக 0.85 % இறக்கம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. எனவே இந்திய சந்தைகள் இன்று ஏற்றத்தில் நிறைவடைந்தாலே பெரிய விஷயம் தான்.
ஈஷர் மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹீரோ மோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ், டி சி எஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. யெஸ் பேங்க், க்ராசிம், வேதாந்தா, பார்தி ஏர்டெல், சன் பார்மா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications