நான்காவது நாளாக சென்செக்ஸ் புதிய உச்சத்தைத்தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பே 41,150 என்கிற டபுள் டாப் ரெசிஸ்டென்ஸை கடந்த பின் சுமார் 800 புள்ளிகள் வரை ஏற்றம் காணலாம் எனச் சொல்லி இருந்தோம். அதாவது 41,950 வரை அசால்டாக உயர வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே கடந்த மூன்று நாட்களும் சென்செக்ஸ் புதிய உச்சங்களைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தன. இன்றும் ஒரு புதிய உச்சத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கலாம்.
எப்படிச் சொல்கிறோம்..?
கடந்த டிசம்பர் 16, 2019 முதல் முந்தைய நாளின் இண்ட்ரா டே ஹை புள்ளிகளை விட அடுத்த வர்த்தக நாளின் குளோசிங் அதிகமாக இருக்கிறது.

உதாரணம்
டிச 16 இண்ட்ராடே ஹை 41,185, அடுத்த நாள் குளோசிங் 41,352.
டிச 17 இண்ட்ராடே ஹை 41,401, அடுத்த நாள் குளோசிங் 41,558.
டிச 18 இண்ட்ராடே ஹை 41,614, அடுத்த நாள் குளோசிங் 41,673. எனவே இன்றும் சுமார் 41,720 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைய வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
நேற்று மாலை சென்செக்ஸ் 41,673 என்கிற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்று காலை சென்செக்ஸ் 41,746 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,809 என்கிற உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய உச்சப் புள்ளி சுமார் 136 புள்ளிகள் தான் அதிகம் என்றாலும், இதுவும் ஒரு பெரிய இண்ட்ரா டே உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நிஃப்டி 12,266 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,293 எனும் உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,320 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 1,187 பங்குகள் ஏற்றத்திலும், 998 பங்குகள் இறக்கத்திலும், 139 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. 2,320 பங்குகளில் 50 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 76 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
யெஸ் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், ஜி எண்டர்டெயின்மெண்ட், எஸ்பிஐ, டைடன் கம்பெனி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. கோட்டக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டி சி எஸ், வேதாந்தா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications