நல்ல லாபம் தர காத்திருக்கும் பாதுகாப்பு துறை பங்கு.. உங்க லிஸ்ட்ல இருக்கா?

இந்தியா தற்போது பாதுகாப்பு துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் பாதுகாப்பு துறை உபகரணங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் பாதுகாப்பு துறை பங்குகள் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

இந்திய பங்கு சந்தையில் முன்னணி தரகு நிறுவனமான ஆஷிகா, முன்னணி ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான ஐடியாஃபோர்ஜ் (IdeaForge) நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு 27 சதவிகிதம் வரை லாபம் தர வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் கணித்துள்ளது.

நல்ல லாபம் தர காத்திருக்கும் பாதுகாப்பு துறை பங்கு.. உங்க லிஸ்ட்ல இருக்கா?

ஐடியாஃபோர்ஜ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ,மந்தமாக இருந்து இந்த நிதியாண்டில் மீண்டு வந்துள்ளதாக ஆஷிகா ஆய்வறிக்கை கூறுகிறது. நடப்பாண்டில் நிறுவனத்தின் வருவாய் 40 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது எனவும், மொத்த லாப வரம்பு மீண்டும் 58 சதவிகிதமாக மீண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இது தவிர QIP (Qualified Institutional Placement) முறை மூலம் நிதி திரட்டிய பிறகு, இந்நிறுவனம் நிகர பண இருப்பு நிலைக்கு மாறியுள்ளது.எனவே முழு ஆண்டு அடிப்படையில் வரிக்கு பிந்தைய லாபத்தின் இலக்கை எட்ட முடியும் என ஆஷிகா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Also Read

இந்நிறுவனம் ஏற்கனவே நேரடிப் போர் சூழல்களில் சோதனைகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. எனவே களத்தில் சோதிக்கப்பட்ட மற்றும் ராணுவத்தில் உடனடியாக பயன்படுத்தக் கூடிய மின்னணுப் போர் உபகரணங்களை கொண்ட ஒரே இந்திய OEM நிறுவனம் என்ற பெருமை ஐடியாஃபோர்ஜ்க்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட திறன் அடிப்படையில்தான், நடப்பு காலாண்டில் ZOLT மற்றும் SWITCH ஆகிய தயாரிப்புகளுக்கு 100 கோடிக்கும் அதிகமான ஆர்டர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

ஐடியாஃபோர்ஜ் நிறுவனம் தனது முதல் அமெரிக்க வர்த்தக ஆர்டரை பெற்றுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள லாமர் CISD காவல் துறைக்காக ட்ரோன்களை வழங்க உள்ளது, அதே போல அமெரிக்க பாதுகாப்பு படையின் நற்சான்றிதழையும் பெற்றுள்ளது என கூறியுள்ளது.

Recommended For You

எனவே ஐடியாஃபோர்ஜ் பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இன்று இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 720 ரூபாயாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இது 55% வளர்ச்சி அடைந்துள்ளது. 3,703 கோடி ரூபாய் சந்தை மூலதன மதிப்பு கொண்ட இந்நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சுமார் 8% பங்குகளை கொண்டுள்ளன.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் டிரோன் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றது. இந்தியா மட்டுமில்லாமல் பல நாடுகளின் ராணுவங்களுக்கும் டிரோன் சப்ளை செய்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+