அசோக் லேலண்ட் சென்னை எம்டிசியில் இருந்து 500 எலக்ட்ரிக் பேருந்துகளை பெரிய அளவில் ஆர்டர் செய்ததால், பங்குகள் மீதான முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இன்று பங்குகள் சுமார் 2% மேலாக உயர்ந்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனம், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்திடம் இருந்து 500 மின்சார பேருந்துகளுக்கான ஆர்டரைப் பெற்றுள்ளது. அதில் 400 பேருந்துகள் ஏசி இல்லாத பேருந்துகளாகவும், 100 பேருந்துகள் ஏசி ஆகவும் இருக்கும்.
நாட்டின் முன்னணி கனரக வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் 500 எலக்ட்ரிக் பஸ்களை ஆர்டர்களை சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து (MTC) பெற்றுள்ளதாக பெற்றுள்ளதாக நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவான OHM குளோபல் மொபிலிட்டி 500 12 மீட்டர் அல்ட்ரா லோ ஃப்ளோர் (மிக குறைந்த தாழ்தளம்) எலக்ட்ரிக் பேருந்துகளுக்கான ஆர்டர் இதில் அடங்கும் இது தவிர, நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி, OHM க்கு EiV12 மாடல் பேருந்துகளை வழங்கும்.
இதற்குச் சில நாட்களுக்கு முன், அசோக் லேலண்ட் சென்னையைச் சேர்ந்த பில்லியன் எலக்ட்ரிக் மொபிலிட்டி குரூப், பில்லியன்இ நிறுவனத்திற்கு மின்சார லாரிகளை வழங்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியது. சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-விஜயவாடா சாலையில் இயக்கப்படும் குரூப் பில்லியன்இ நிறுவனத்திற்கு 180 மின்சார லாரிகளை வழங்க அசோக் லேலண்ட் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கிடையில், சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தில் (எம்டிசி) இருந்து வரும் 500 மின்சாரப் பேருந்துகளின் வரிசையில் 400 பேருந்துகள் ஏசி இல்லாத பேருந்துகளாகவும், 100 பேருந்துகள் ஏசி ஆகவும் இருக்கும். இந்த பேருந்துகளில் ஒரே நேரத்தில் 37 பயணிகளும், 24 பயணிகள் நின்று கொண்டும் பயணிக்க முடியும். கூடுதலாக, SWITCH EiV12 ஒரு வலுவான 650V மின்சார கட்டமைப்பால் இயக்கப்படுகிறது. அத்துடன் IP67-மதிப்பிடப்பட்ட பேட்டரிகளைக் கொண்டுள்ளது. இது நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர்:இந்த பேருந்துகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர்கள் தடையின்றி பயணிக்க முடியும் என்றும், இது சென்னையின் பரபரப்பான மற்றும் நீண்ட சாலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முதலாவதாக, பெரும்பூர், பெரும்பாக்கம், பூந்தமல்லி, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை மற்றும் கே.கே.நகர் உள்ளிட்ட ஆறு முக்கிய டெப்போக்களில் சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளது.
பங்குகளில் 2 சதவீதம் உயர்வு: இன்று, அசோக் லேலண்டின் பங்குகள் அதன் முந்தைய இறுதி விலையான ரூ.214.11 லிருந்து கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்து ரூ.218.34 இன் இன்ட்ராடே அதிகபட்சமாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் இந்த பங்கு 18 சதவீதம் சரிந்துள்ளன. அதே சமயம், 6 மாத காலத்தில் 22 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. ஒரு வருடத்தில், முதலீட்டாளர்களுக்கு 28 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.63.66 ஆயிரம் கோடியாக உள்ளது. அதேபோல் 52 வார அதிகபட்ச விலையாக ரூ.264.65 ஆகவும், குறைந்தபட்ச விலையாக ரூ.157.55 ஆகவும் உள்ளது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications