பங்குச் சந்தையை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமைந்தது. 2024 செப்டம்பரில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. இருப்பினும் அதன் பிறகு இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்தை காணவில்லை. தற்சமயம் இந்திய பங்குச் சந்தையின் போக்கு ஏற்றத்தில் உள்ளதா, சரிவில் உள்ளதா என்று உறுதியாக கூற முடியாத நிலையில் உள்ளது. இருப்பினும் இந்த ஏற்ற இறக்கமான சூழலிலும் சில நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் அளித்து வருகின்றன. அப்படியொரு நிறுவன பங்குதான் ஏஎஸ்ஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்.
ஏஎஸ்ஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் சுரங்கம், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு ராஜஸ்தான் மாநிலம் ராம்கஞ்ச்மண்டியில் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு கல் சுரங்க குவாரி உள்ளது. இந்த குவாரி உலகின் மிகப்பெரிய கல் சுரங்க குவாரி என்பது குறிப்பிடத்தக்கது. 1945ல் தொடங்கப்பட்ட நிறுவனத்துக்கு நீண்ட காலமாக செயல்பட்டு வரும் நிறுவனங்களில் ஒன்று என்ற பெருமை உண்டு. மும்பை பங்குச் சந்தையில் கடந்த திங்கட்கிழமையன்று இந்நிறுவன பங்கின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஏஎஸ்ஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு விலை 18.7 சதவீதம் உயர்ந்து ரூ.54.90ஐ எட்டியது.

இந்நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது மற்றும் இந்நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வாங்கியது போன்ற தகவல்கள் இந்நிறுவன பங்கு விலை உயர்வுக்கு முக்கிய காரணம். 2024 டிசம்பர் காலாண்டில் ஏஎஸ்ஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய் 9.66 சதவீதம் அதிகரித்து ரூ.54.46 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் லாபம் 10.64 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.12 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் முதலீட்டு நோக்கத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 8 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது.
2024 ஜூன் 5ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை வார குறைந்தபட்சமான ரூ.22.30க்கு சரிந்தது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. கடந்த டிசம்பர் 12ம் தேதி மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கு தனது 52 வார அதிகபட்ச விலையான ரூ.65.89ஐ எட்டியது. இருப்பினும் அதன் பிறகு இப்பங்கின் விலை சரிய தொடங்கியது. இந்நிலையில் நேற்று இப்பங்கின் விலை ஒரே நாளில் 18 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.53.43ல் நிறைவடைந்தது.
இதற்கிடையில் இன்று ஏஎஸ்ஐ இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை மதியம் 2 மணி நிலவரப்படி 3.18% சரிவில் ரூ.51.73 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.
Story Written By: Subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications