சரிவில் உலக பங்குச் சந்தைகள்! ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா வரை முக்கிய பங்கு சந்தைகளின் நிலவரம் என்ன?

இன்று இந்திய பங்குச் சந்தைகள் கொஞ்சம் பலமான வீழ்ச்சி கண்டன. சென்செக்ஸ் 1,114 புள்ளிகள் சரிந்து 36,553 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஒரே நாளில் 2.96 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 இண்டெக்ஸ், 326 புள்ளிகள் (2.93 %) சரிந்து 10,805 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

இப்படி இந்திய பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி கண்டு இருக்கும் இந்த நேரத்தில், உலக பங்குச் சந்தைகளின் நிலை என்ன? என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

 ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

இன்று (24 செப் 2020, வியாழக் கிழமை) ஆசிய சந்தைகளில் சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி மட்டுமெ 0.10 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆசியாவின் மற்ற முக்கிய பங்குச் சந்தைகள் எல்லாமே கொஞ்சம் பலத்த இறக்கத்தில் தான் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.

ஆசிய சந்தைகளின் விவரம்

ஆசிய சந்தைகளின் விவரம்

  • ஜப்பானின் நிக்கி -1.11 %
  • சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் -1.22 %
  • ஹாங்காங்கின் ஹேங் செங் -1.82 %
  • தைவானின் தைவான் வெயிடெட் -2.54 %
  • தென் கொரியாவின் கோஸ்பி -2.59%
  • தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் -1.31 %
  • இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் -1.53 %
  • சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -1.72 %

என எல்லா முக்கிய ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகளும் பலத்த சரிவில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.

 ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள்

இன்று (24 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 1.03 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.58 % இறக்கத்திலும்,
ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.27 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றம் காண முடியாமல் திணறிக் கொண்டு இருக்கின்றன.

அமெரிக்க பங்குச் சந்தைகள்

அமெரிக்க பங்குச் சந்தைகள்

தற்போது (24 செப் 2020) வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் அமெரிக்காவின்
டவ் ஜோன்ஸ் (Dow Jones) பங்குச் சந்தை 0.60 % இறக்கம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நாஸ்டாக் (NASDAQ) 0.67 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
எஸ் & பி 500 (S & P 500) சந்தை 0.61 % சரிந்து வர்த்தகமாகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+