ஒரே ஒரு ஆர்டர்..!! வரலாற்று உச்சத்தை தொட்ட பாதுகாப்பு துறை பங்கு..!! இப்போது வாங்கலாமா?

இந்தியாவில் பாதுகாப்பு துறையில் இயங்கி வரும் அஸ்ட்ரா மைக்ரோவேவ் (Astra Microwave) நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்திடமிருந்து மிகப்பெரிய ஆர்டரை பெற்றுள்ளது. இதனை அடுத்து அதன் பங்கு விலை இன்றைய பங்கு சந்தையில் புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது.

வெள்ளிக்கிழமை இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தான் காணப்பட்டன. பெரும்பாலான பங்குகள் பச்சை நிறமாகவே காட்சி தந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு முக்கிய காரணம். இன்று வர்த்தகத்தில், அஸ்ட்ரா மைக்ரோவேவ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 14 சதவீதம் வரை உயர்ந்து 1,960 ரூபாய் என புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த பங்கு ஒரே நாளில் இவ்வளவு உயர்வது இதுவே முதல்முறையாகும்.

ஒரே ஒரு ஆர்டர்..!! வரலாற்று உச்சத்தை தொட்ட பாதுகாப்பு துறை பங்கு..!! இப்போது வாங்கலாமா?

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் சுமார் 2,205.23 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரை வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அஸ்ட்ரா மைக்ரோவேவ் நிறுவனம், உத்தம் ரேடார் (Uttam Radar) திட்டத்திற்காக 122 ஆன்டெனா யூனிட்களையும் , 121 இன்டர்ஃபேஸ் பிரேம்களையும் சப்ளை செய்ய உள்ளது. இந்த ஒப்பந்தம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read

கடந்த நிதியாண்டின் முடிவின் போது அஸ்ட்ரா மைக்ரோவேவ் நிறுவனத்தின் மொத்த ஆர்டர் புத்தகமே சுமார் 2,610 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது கிடைத்துள்ள இந்த ஒற்றை ஆர்டர், அந்த நிறுவனத்தின் வர்த்தகத்தை பெரிய அளவில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் நம்பி இதில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.

கடந்த மார்ச் மாத இறுதியில் 835.90 ரூபாயாக இருந்த இந்த நிறுவனத்தின் பங்கு விலை, வெறும் நான்கு மாதங்களில் 130 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இதன் மதிப்பு 100 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து மல்டிபேக்கர் பங்காக உருவெடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு சுமார் 1000% வளர்ச்சி அடைந்துள்ளது.

Recommended For You

முன்னதாக, அஸ்ட்ரா மைக்ரோவேவ் நிறுவனம் தனது விண்வெளி , வானிலை ஆய்வு மற்றும் பிற வணிகங்களை தனி நிறுவனமாக பிரிக்க இருப்பதாக அறிவித்தது. இந்த மறுசீரமைப்பு மூலம் நிர்வாக திறனை மேம்படுத்தவும், முதலீட்டாளர்களை கவர்ந்து வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2028ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+