நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஏதர் எனர்ஜி. இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களமிறங்கி நிதி திரட்டும் நோக்கில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது. இருப்பினும் ஏதர் எனர்ஜி நிறுவனம் திடீரென கடந்த இரண்டரை மாதங்களாக ஐபிஓ பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்நிலையில் அண்மையில் மீண்டும் ஐபிஓவுக்கான பணிகளை தீவிரப்படுத்தியது.
கடந்த 22ம் தேதியன்று, இந்திய பங்குச் சந்தை வாரியத்திடம் (செபி) தனது ஐபிஓவுக்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. இதனையடுத்து ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் ஐபிஓ நடவடிக்கை உறுதியானது. ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் ரூ.2,981 கோடி மதிப்பிலான ஐபிஓ நாளை (ஏப்ரல் 28) தொடங்கி புதன்கிழமை (ஏப்ரல் 30) நிறைவடையும். ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் ஐபிஓ விலை வரம்பு ரூ.1 முக மதிப்புள்ள ஒரு பங்குக்கு ரூ.304 முதல் ரூ.321 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கும் ஏதர் எனர்ஜியின் ஐபிஓவில், ரூ.2,626 கோடி மதிப்புள்ள 8.18 கோடி புதிய பங்குகள் வெளியிடுவதையும், புரோமோட்டர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் 1.1 கோடி பங்குகளை ஏல முறையில் பங்கு விற்பனையையும் உள்ளடக்கியது. இந்நிறுவனத்தின் ஐபிஓ லாட் அளவு 46 பங்குகள். அதாவது பங்கு வேண்டுவோர் குறைந்தபட்சம் 46 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு 46 பங்குகளின் மடங்குகளில் பங்குகள் வேண்டி விண்ணப்பிக்கலாம்.
ஐபிஓவுக்கு முன்னதாக, கிரே சந்தையில் தற்போது ஏதர் எனர்ஜி பங்கின் விலை ரூ.17 பிரீமியத்தில் வர்த்தகமாகி வருகிறது. ஐபிஓ வெளியீட்டு விலையில் அதிகபட்ச விலையையும், கிரே சந்தையில் தற்போதைய பிரீமியத்தை கருத்தில் கொண்டால், பங்குச் சந்தையில் ஏதர் எனர்ஜி பங்கு ரூ.338 ( ரூ.321 (அதிகபட்ச வெளியீட்டு விலை) + 17 (கிரே சந்தை பிரீமியம் விலை) என்ற விலையில் பட்டியலிடப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஐபிஓ விலையை காட்டிலும் 5.30 சதவீதம் அதிகமாகும்.
கிரே சந்தை பிரீமியம் என்பது முதலீட்டாளர்கள் வெளியீட்டு விலையை காட்டிலும் எவ்வளவு அதிகமாக செலுத்த தயாராக இருப்பதைக் குறிக்கிறது. ஏதர் எனர்ஜியின் முதற்கட்ட பங்கு ஒதுக்கீடு மே 2ம் தேதி தீர்மானிக்கப்பட உள்ளது. பங்குகள் ஒதுக்கபடாதவர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கும் பணிகள் மே 5ம் தேதி தொடங்கும். அன்றைய தினமே பங்கு ஒதுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின டீமேட் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். மே 6ம் தேதியன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications