அவந்தி ஃபீட்ஸ் நிறுவனம் இறால் தீவனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. மேலும் இந்நிறுவனம் இறால்களை பதப்படுத்தி ஏற்றுமதியும் செய்கிறது. ஐரோப்பா,ஜப்பான்,கொரியா,சீனா,ரஷ்யா,கனடா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கு இந்நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. இந்நிறுவனம் வலுவான நிதி நிலை முடிவுகள் மற்றும் வர்த்தக வளர்ச்சியை கொண்டுள்ளதால் இந்நிறுவன பங்குகளுக்கு பங்குச் சந்தையில் நல்ல டிமாண்ட் உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சத்தை எட்டியது.
நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே அவந்தி ஃபீட்ஸ் பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.821.15ஐ எட்டியது. இருப்பினும் வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.792.30ல் முடிவுற்றது. நேற்று இப்பங்கு புதிய 52 வார உச்சத்தை எட்டியதால் வரும் நாட்களில் இப்பங்கின் விலை ஏற்றம் காண வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளில் அவந்தி ஃபீட்ஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 13,000 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2021 மார்ச் மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.6.30 என்ற அளவில் இருந்தது. 2017 நவம்பரில் இந்நிறுவன பங்கின் விலை இதுவரை இல்லாத உச்ச விலையான ரூ.962.67ஐ எட்டியது.

தற்போது இப்பங்கின் விலை அதன் உச்ச விலையை காட்டிலும் 15 சதவீதம் குறைவாக உள்ளது. இந்த ஆண்டில் இந்நிறுவன பங்கின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 மார்ச் 14ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.472க்கு சென்றது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போது இப்பங்கின் விலை 75 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 டிசம்பர் காலாண்டில் அவந்தி ஃபீட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 86.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.135.2 கோடியாக உயர்ந்துள்ளது. அதிக லாப வரம்பு மற்றும் செயல்பாட்டு திறன் காரணமாக இந்நிறுவனத்தின் நிகர லாபம் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 9 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,365.8 கோடியாக உயர்ந்துள்ளது. இறால் தீவனம் மற்றும் கடல் உணவுபொருட்கள் ஏற்றுமதி வணிகத்தில் நிலையான தேவை இருந்ததால் இந்நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில், இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி தொழிலை ஆதரிப்பதற்காக ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டது. இது அவந்தி ஃபீட்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications