இந்த 10 பங்குகளை வாங்கி போடுங்க.. தீபாவளி முதலீட்டு வாய்ப்பு!

மும்பை: சர்வதேச பங்கு சந்தைகளில் கடந்த ஒராண்டாகவே அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றது. அதே சமயம் இந்திய பங்கு சந்தையில் அந்தளவுக்கு தாக்கம் இல்லை எனலாம். இந்த காலகட்டத்திலும் சில பங்குகள் நல்ல மார்ஜினை கொண்டுள்ளன.

இந்தியாவில் மக்களின் செலவினம் அதிகரித்துள்ளது. நுகர்வுகள் அதிகரித்துள்ளது. தேவையானது அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு சந்தையில் சில பங்குகள் நல்ல ஏற்றத்தினை கண்டு வருகின்றது.

சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பணவீக்கமும் உச்சத்தில் உள்ளது. மத்திய வங்கிகளின் நட்வடிக்கைகள் பற்றிய கவலைகள் இருந்தாலும், சில பங்குகள் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன.

 வாங்க சில வாய்ப்புகள்

வாங்க சில வாய்ப்புகள்

இதற்கிடையில் இந்தியவின் வளர்ச்சி விகிதம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கலாம். இந்தியா சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை வழங்க கூடும் என்று தரகு நிறுவனம் கணித்துள்ளது.

உலகளாவிய பணவீக்கம், உலகளாவிய பணப்புழக்கத்தின் ஏற்ற இறக்கம் என் பல காரணிகளுக்கும் மத்தியிலும், இந்திய சந்தையில் வாங்குவதற்கான சில வாய்ப்புகளை வழங்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கி

குறிப்பாக வரவிருக்கும் தீபாவளி முகூர்த்த டிரேடிங் அமர்வில் 10 பங்குகளை வாங்க நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

ஐசிஐசிஐ டைரக்ட் ஆக்ஸிஸ் வங்கி சில்லறை வணிகத்தில் கவனம் செலுத்தி வருகின்றது. இது கிட்டதட்ட 60% பங்கினை கொண்டுள்ளது. இது சம்பளதாரர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பற்ற கடன்களில் 80% அதிகமானவை வழங்கப்படுகிறது. பாதுகாப்பற்ற கடன்களில் அதிக பங்கினை கொண்டுள்ளது. அதேசமயம் இந்த கடன் வளர்ச்சியானது அதன் மார்ஜினை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சொத்து தரம் மற்றும் வருவாய் ஏற்ற இறக்கம் இருக்கிறது என கூறியுள்ளது. வலுவான வணிக வளர்ச்சி, செயல்பாட்டு திறன் மேம்படுத்தல் என பலவகையிலும் வணிகத்தினையும் மேம்படுத்தி வருகின்றது. இதற்கிடையில் இவ்வங்கியின் வளர்ச்சி விகிதம் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை 780 - 815 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இதன் இலக்கு விலை 970 ரூபாயாகும்.

சிட்டி யூனியன் வங்கி

சிட்டி யூனியன் வங்கி

சிட்டி யூனியன் வங்கியினை 170 - 185 ரூபாய் என்ற லெவலில் வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலை 215 ரூபாயாகவும் நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

இதன் முடங்கியிருந்த வணிகம் தொடர்ந்து மேம்படத் தொடங்கியுள்ள நிலையில், இதன் மார்ஜின் விகிதம் வலுவடைந்து வருகின்றது. இதன் செயல்பாட்டு வளர்ச்சி விகிதமும் மேம்பட தொடங்கியுள்ளது.

அப்பல்லோ டயர்ஸ்

அப்பல்லோ டயர்ஸ்

அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் வர்த்தக வாகன பிரிவில் வலுவான இரு இலக்க வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது தவிர பயணிகள் வாகன பிரிவிலும் நல்ல வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ளது.

டயர் உற்பத்திற்கு பயன்படுத்தப்படும் மூலதன பொருட்கள் விலையானது பெரும் உச்சம் தொட்டுள்ளது. இது அதன் உற்பத்தி செலவினங்களை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் வருவாய் விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பங்கினை 260 - 275 ரூபாயில் வாங்கலாம் எனவும், இதன் இலக்கு விலை 335 ரூபாய் வரையில் செல்லலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஈச்சர் மோட்டார்ஸ்

ஈச்சர் மோட்டார்ஸ்

ஈச்சர் மோட்டார்ஸ் பங்கு விலையானது 3400 - 3450 ரூபாய்க்குள் வாங்கலாம் எனவும், இதன் இலக்கு விலையினை 4170 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளனர்.

ஈச்சர் மோட்டார்ஸ் சமீபத்தில் தான் ஹண்டர் 350 என்ற வாகனத்தினை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இதன் வாகன விற்பனையும் அதிகரித்துள்ளது. இதன் அதன் வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் இப்பங்கினை வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

கோபோர்ஜ்

கோபோர்ஜ்

சர்வதேச ட்ஜிட்டல் சொல்யூசன்ஸ் நிறுவனமான கோபோர்ஜ் டாலரின் மதிப்பு ஏற்றம் காரணமாக அதன் வருவாய் வளர்ச்சி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வலுவான ஒப்பந்தங்களை செய்து வரும் நிலையில், இதன் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் 11 மிகப்பெரிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.

லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ்

லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ்

லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் நிறுவனம் ஹோட்டல் துறையில் வளர்ச்சியானது மேம்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது கணிசமானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளி நாட்டு பயணிகளுக்கு சர்வதேச எல்லைகளை திறக்கப்பட்டுள்ளதன் மூலம், மும்பை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல் வணிகமும் கணிசமாக மேம்படும்.

அதன் முக்கிய பயனாளியாக லெமன் ட்ரீ இருக்கும். இதனை 78 - 88 ரூபாய்க்குள் வாங்கலாம். இதன் இலக்கு விலை 110 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளனர்.

ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ்

ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ்


ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ் பங்கினை 285 - 305 ரூபாய் என்ற லெவலில் வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலையினை 345 ரூபாயாகவும் நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

தனியார் கேன்சர் கேர் நிறுவனமான ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ் தொடர்ந்து வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாரஸ் லேப்ஸ்

லாரஸ் லேப்ஸ்

லாரஸ் லேப் பங்கினை 485 - 510 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இதன் இலக்கு விலை 675 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

மருத்துவ துறையை சார்ந்த இந்த பங்கானது, கடந்த பல ஆண்டுகளாகவே மருத்துவ சந்தையில் கடுமையாக உழைத்து வருகின்றது. உலகளாவிய தேவை அதிகரித்து வரும் நிலையில், இதன் தேவையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்டெய்னர் கார்ப்

கன்டெய்னர் கார்ப்

கன்டெய்னர் கார்ப் நிறுவனத்தினை 685 - 715 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இதன் இலக்கு விலை 890 ரூபாயாகும். அடுத்த 3 - 4 வருடங்களில் இதன் வருவாய் விகிதம் இருமடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிரது.

ஹெவல்ஸ் இந்தியா

ஹெவல்ஸ் இந்தியா

ஹெவல்ஸ் இந்தியா பங்கினை 1220 - 1320 ரூபாய் என்ற லெவலில் வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலையானது 1650 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

இந்த நிறுவனம் 700 - 800 கோடி ரூபாய் செலவிடவும் திட்டமிட்டுள்ளது. இதன் உற்பத்தி திறன், ஏர் கண்டிசனர், வாஷிங் மெஷின், வயர் மற்றும் கேபிள்கள் என அனைத்து பிரிவிலும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது இதன் நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+