அள்ளிக் கொடுத்த ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, இன்ஃபோசிஸ் & ஹிண்டால்கோ பங்குகள்.. இனியும் வாங்கலாமா?

ஆக்ஸிஸ் வங்கி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ் மற்றும் எஸ்பிஐ உள்ளிட்ட பல பங்குகள், அதன் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வெளியானதில் இருந்து ஏற்றம் கண்டு வருகின்றன.

மேற்கண்ட பங்குகளில் ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ மற்றும் ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் இரு இலக்கில் வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன.

இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் பிரிட்டானியா நிறுவனம் பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் அதன் விலை அதிகரித்துள்ளது.

ஆக்ஸிஸ் வங்கியின் நிலவரம்?

ஆக்ஸிஸ் வங்கியின் நிலவரம்?

ஆக்ஸிஸ் வங்கியின் காலாண்டு முடிவானது கடந்த அக்டோபர் 20 அன்று வெளியான நிலையில், இந்த தனியார் வங்கியானது கடந்த ஆண்டினை காட்டிலும் 70% வளர்ச்சியினை கண்டுள்ளது. இதன் நிகரலாபம் 5329.77 கோடி ரூபாயாக அதிகரித்தது. இதன் நிகர வட்டி வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 3% அதிகரித்து, 10,360 கோடி ரூபாயாக அதிகரித்தது. இதே நிகர வட்டி மார்ஜின் விகிதமானது 7 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 3.96% ஆக அதிகரித்தது. இதன் சராசரி இலக்கு விலையானது 995.24 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

இதே பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நவம்பர் 4 அன்று இதன் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. இதன் பங்கு விலையானது 8.8% ஆக அதிகரித்துள்ளது. இந்த பேக்கரி பங்கானது 28.47% ஒருங்கிணைந்த நிகர லாபத்தினை பதிவு செய்து, 490.58 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வருவாய் விகிதம் 21.40% அதிகரித்து, 4379.61 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் சராசரி இலக்கு விலையானது 515.83 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிரெண்ட் லைன் கணிப்பின் படி 15% இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என நிறுவனம் கணித்துள்ளது. இந்த நிறுவனம் நவம்பர் 11 அன்று காலாண்டு முடிவினை வெளியிட்ட நிலையில், இப்பங்கின் விலை 6% ஏற்றம் கண்டுள்ளது.

ஆதித்யா பிர்லா குழுமம்

ஆதித்யா பிர்லா குழுமம்

ஆதித்யா பிர்லா குழுமம் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் .35.4% குறைந்துள்ளதாக அறிவித்தது. இதன் வரிக்கு பிந்தைய லாபம் 2205 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அதன் மூலதன செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், லாபம் சரிவினைக் கண்டுள்ளது.

இன்ஃபோசிஸ் & எஸ்பிஐ

இன்ஃபோசிஸ் & எஸ்பிஐ

இன்ஃபோசிஸ் மற்றும் எஸ்பிஐ பங்குகள் விலை அதன் காலாண்டு முடிவுகள் வெளியான நிலையில், 3 - 4% ஏற்றம் கண்டுள்ளன. இந்த ரிட்டர்ன் விகிதமானது நவம்பர் 15 வரையில் கணக்கிடப்பட்டுள்ளது. இன்ஃபோசிஸ நிறுவனம் அக்டோபர் 13 அன்று அதன் காலாண்டு முடிவினை வெளியிட்டது. எஸ்பிஐ நவம்பர் 5 அன்று அதன் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. இதன் சராசரி இலக்கு விலையாக 696.85 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது 16% ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.

இன்ஃபோசிஸ் இலக்கு விலை

இன்ஃபோசிஸ் இலக்கு விலை

இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இலக்கு விலை சராசரியாக 1716 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது 7% ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 11.10% அதிகரித்து, 6021 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே அதன் நிகர விற்பனை 23.4% அதிகரித்து, 36,538 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இதன் செயல்பாட்டு மார்ஜின் விகிதமானது 21.5% ஆக அதிகரித்துள்ளது. இது ஜூன் காலாண்டில் 20.1% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டில் 23.6% ஆக இருந்தது.

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ செப்டம்பர் காலாண்டில் அதன் நிகர லாபம் 13,265 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 7627 கோடி ரூபாயாக இருந்தது.

எஸ்பிஐ-யின் இலக்கு விலை

எஸ்பிஐ-யின் இலக்கு விலை

இதே ரிலையன்ஸ் இண்ஸ்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 14,752 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 13,656 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கிடையில் எஸ்பிஐ-யின் இலக்கு விலை 700 - 760 ரூபாய் என்ற லெவலில் இருக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+