அமெரிக்க வரி விதிப்பு, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை திரும்ப பெறுவது என தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் ஒரு நற்செய்தியை தெரிவித்துள்ளது.
ஆக்சிஸ் கணிப்பு: இந்திய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50, 2026 மார்ச் மாதத்திற்குள் 26,800 புள்ளிகளை எட்டும் என ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்துள்ளது. சந்தை ஏற்ற இறக்கம் குறைவது, அமெரிக்க பொருளாதாரத்தில் சாதகமான வளர்ச்சி ஏற்படுவது ஆகியவை இந்த கணிப்புக்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பல்வேறு சாதகமான பொருளாதார காரணிகளின் அடிப்படையில், நிஃப்டி 50இன் வளர்ச்சிக்கு வலுவான வாய்ப்புள்ளது என ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. அரசியல் நிலைத்தன்மை, அரசின் மூலதன செலவினம், தனியார் மூலதனச் சுழற்சி, கிராமப்புற வளர்ச்சி, மற்றும் அமெரிக்க பொருளாதாரம் நிஃப்டியின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு வளர்ச்சி: நிஃப்டி 50-க்கான அடிப்படை மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இலக்கு 25,500 புள்ளிகளாகும். 2026 மார்ச் மாத இலக்கை 25,500 ஆக திருத்தியுள்ளதாகவும், 2027 மார்ச் மாத வளர்ச்சியை 20 மடங்காக மதிப்பிடுவதாகவும் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் கூறியுள்ளது. 2026 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இருந்து வளர்ச்சி அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனவே சாதகமான சூழ்நிலையில், நிஃப்டி 50, 2026 மார்ச் மாத இலக்கு 26,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு வீழ்ச்சி: பாதகமான சூழ்நிலையில், நிஃப்டி 50க்கான 2026 மார்ச் மாத இலக்கு 21,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் எடுக்கும் சில நடவடிக்கைகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வீழ்ச்சி அடைந்தால் இந்த அளவுக்கு வீழும் என தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி: உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இந்திய பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி உள்நாட்டு சந்தைக்கு வளர்ச்சியை கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அபாயங்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி நிலையாக உள்ளது என கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும், அரசும் வளர்ச்சிக்கு உதவும் நிதி மற்றும் பணவியல் நடவடிக்கைகளை எடுத்து வருவதால், 2026 நிதியாண்டு 2025 நிதியாண்டை விட வலுவாக இருக்கும் என ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் குறிப்பிட்டுள்ளது.
ஜூலை எவ்வளவு சரிவு: கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்திய பங்குச் சந்தை சரிவைக் கண்டது. கலவையான காலாண்டு முடிவுகள் மற்றும் அமெரிக்க வரி தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் இந்த சரிவுக்கு காரணங்களாக அமைந்தன. நிஃப்டி 50, ஜூலையில் 3% சரிந்து, நான்கு மாத தொடர் லாபத்தை முறியடித்தது. ஆகஸ்ட் மாதத்தில் மேலும் 1.4% சரிந்தது.
இனி எப்படி இருக்கும்: இனி வரும் மாதங்களில் அமெரிக்க அரசின் கொள்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகள், மற்றும் நாணயம் மற்றும் எண்ணெய் விலைகளின் போக்கு ஆகியவற்றை சந்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.மேலும் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ், பல்வேறு பிரிவுகளில் 15 சிறந்த பங்குகளை பரிந்துரைத்துள்ளது. லார்ஜ் கேப் நிறுவனங்களில் 9 பங்குகளும், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் தலா 3 பங்குகளும் இதில் அடங்கும்.
லார்ஜ் கேப் பங்குகள்: ஹெச்டிஎஃப்சி வங்கி (இலக்கு விலை: ரூ.1,150), எஸ்பிஐ (இலக்கு விலை: ரூ.1,025), பாரதி ஏர்டெல் (இலக்கு விலை: ரூ.2,300), பஜாஜ் ஃபைனான்ஸ் (இலக்கு விலை: ரூ.1,100), வருண் பேவரேஜஸ் (இலக்கு விலை: ரூ.590), ஸ்ரீராம் ஃபைனான்ஸ் (இலக்கு விலை: ரூ.750), அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் (டிமார்ட்) (இலக்கு விலை: ரூ.5,280), லூபின் (இலக்கு விலை: ரூ.2,400), மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் (இலக்கு விலை: ரூ.1,450).
மிட் கேப் பங்குகள்: ஹீரோ மோட்டோகார்ப் (இலக்கு விலை: ரூ.5,900), பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் (இலக்கு விலை: ரூ.2,000), மற்றும் ஏபிஎல் அப்பல்லோ ட்யூப்ஸ் (இலக்கு விலை: ரூ. 1,950).
ஸ்மால் கேப் பங்குகள்: கிர்லோஸ்கர் பிரதர்ஸ் (இலக்கு விலை: ரூ.2,330), சான்செரா இன்ஜினியரிங் (இலக்கு விலை: ரூ.1,500), மற்றும் கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் (இலக்கு விலை: ரூ.1,470).
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications