பங்கு சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் இந்திய சந்தையில் பதற்றமான நிலையே இருந்து வருகின்றது. குறிப்பாக ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு பிறகே சந்தையில் ஏற்றத் தாழ்வுகள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிபுணர்கள் சந்தையில் செல்லிங் பிரஷர் அதிகம் உள்ளது என கூறியுள்ளனர்.
எனினும் இந்த காலகட்டத்தில் கவனிக்க ,வேண்டிய பங்குகள் பட்டியலில் மூன்று பங்குகளை சுட்டிக் காட்டியுள்ளது.
பங்கு பரிந்துரை
ராஜேஷ் பால்வியா பங்கு பரிந்துரையின் படி, பல்ராம்பூர் சினி, பயோகான் மற்றும் இந்தஸ் இந்த் வங்கி உள்ளிட்டவற்றை இன்று வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையில் நிஃப்டி 17,900 என்ற லெவலை தாண்டி வர்த்தகமாகும் பட்சத்தில், இது மீண்டும் ஏற்றம் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நிஃப்டி 18,000 முதல் 18,100 என்ற லெவலில் இருக்கலாம். இதே முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 17,700 ஆகவும்ம் இதனை உடைத்தால் 17,600 - 17,500 என்ற லெவலில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்னிக்கலாக ஏற்றம்
நிஃப்டி தற்போது 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக வர்த்தகமாகி வருகி ன்றது. இது மேற்கொண்டு ஏற்றம் காணலாம் என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. மீடியம் டெர்மில் நிஃப்டி மேற்கொண்டு ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தற்போதைய லெவலில் வாங்கவே பரிந்துரை செய்யப்படுகிறது.
பேங்க் நிஃப்டி
பேங்க் நிஃப்டி 41,500 என்ற லெவலை தாண்டினால் வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளது. இந்த லெவலை உடைக்கும்பட்சத்தில் 41,650 ரூபாய் முதல் 41,900 ரூபாய் என்ற லெவலை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாங்க பரிந்துரை
பல்ராம்பூர் சினி நிறுவனத்தினை 379 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இதன் இலக்கு விலையானது 398 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் ஆக 370 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது.
பயோகான் நிறுவனத்தினை 299 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையாக 315 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் 294 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளனர்.
இதே இந்தஸ் இந்த் வங்கியினை 1259 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையாக 1300 ரூபாயினையும், ஸ்டாப் லாஸ் ஆக 1235 ரூபாயினையும் நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications