பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதியன்று 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில், பல துறைகளுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் பல நிறுவன பங்குகளின் விலை உயர தொடங்கியுள்ளது. இந்நிலையில், பங்கு தரகு நிறுவனமான பஜாஜ் புரோக்கிங், அடுத்த 12 மாதங்களில் 21 முதல் 24 சதவீதம் ஆதாயம் தர வாய்ப்புள்ள அபீஜே சுரேந்திரா பார்க் ஹோட்டல்ஸ் உள்பட 3 நிறுவன பங்குகளை பரிந்துரை செய்துள்ளது.
அபீஜே சுரேந்திரா பார்க் ஹோட்டல்ஸ் லிமிடெட்: ஸ்மால்கேப் பங்கு பிரிவை சேர்ந்த இந்நிறுவனம் ஹோட்டல் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.182.45ஆக இருந்தது. வரும் ஆண்டில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.235 நோக்கி செல்லும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கினை ரூ.190-200 என்ற வரம்பில் வாங்கலாம் என பஜாஜ் புரோக்கிங் கணித்துள்ளது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.3,893 கோடியாக உள்ளது.

டிசிஎக்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட்: இந்நிறுவனம் கேபிள்கள் மற்றும் வயர் ஹார்னஸ் அசெம்பிளிகளின் சிஸ்டம் ஒருங்கிணைப்பு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.333.70ஆக இருந்தது. வரும் காலாண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.449 நோக்கி செல்லும் என்றும் இந்நிறுவன பங்கினை ரூ.355-380 என்ற அளவில் வாங்கலாம் என்றும் பஜாஜ் புரோக்கிங் தெரிவித்துள்ளது. டிசிஎக்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.3,716 கோடியாக உள்ளது.
அயன் எக்ஸ்சேஞ்ச்: இந்நிறுவனம் நாட்டின் சிறந்த நீர் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை தீர்வு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் கழிவுநீர் மற்றும் மொத்த நீர் சுத்திகரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.591.75ஆக இருந்தது. வரும் ஆண்டில் இப்பங்கின் விலை ரூ.780 என்ற நிலையை நோக்கி செல்லும் என்று பஜாஜ் புரோக்கிங் தெரிவித்துள்ளது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.8,679 கோடியாக உள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications