நாட்டின் முன்னணி தனியார் வங்கியான பந்தன் வங்கி தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. பந்தன் வங்கியின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
கடந்த செப்டம்பர் காலாண்டில் பந்தன் வங்கியின் லாபம் மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ள போதிலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை. பந்தன் வங்கி கடந்த செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.721 கோடி ஈட்டியுள்ளது. 2022 செப்டம்பர் காலாண்டில் பந்தன் வங்கி லாபமாக ரூ.209 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

2023 செப்டம்பர் காலாண்டில் பந்தன் வங்கியின் நிகர வட்டி வருவாய் (வட்டி வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.2,193 கோடியிலிருந்து ரூ.2,443 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 செப்டம்பர் இறுதி நிலவரப்படி, பந்தன் வங்கியின் மொத்த வாராக் கடன் 7.3 சதவீதமாக உள்ளது.
பந்தன் வங்கியின் லாபம் மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளபோதிலும், அந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் நிபுணர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பந்தன் வங்கியின் நிகர வட்டி வருவாய் மதிப்பீட்டை காட்டிலும் குறைவாக இருந்தது, வாராக் கடன் நிலவரம் கவலை அளிப்பதாக உள்ளது.
மேலும், விதிமுறைகளின்படி, வளர்ந்து வரும் தொழில்முனைவோர் வணிகத்தில் special mention account-ல் ரூ.1,550 கோடி சேர்க்கப்பட்டுள்ளதாக பந்தன் வங்கி விளக்கம் அளித்துள்ளதை நிபுணர்கள் ஏற்கவில்லை.
பந்தன் வங்கியின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் எதிர்ப்பார்ப்புக்கு இணையாக இல்லாததால் முன்னணி தரகு நிறுவனங்கள், பந்தன் வங்கிக்கான லாப மதிப்பீடுகளை குறைத்துள்ளன. முன்னணி தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால், பந்தன் வங்கிக்கான 2023-24 மற்றும் 2024-25ம் நிதியாண்டுக்களுக்கான லாப மதிப்பீட்டை 3 முதல் 5 சதவீதம் குறைத்துள்ளது.
நுவாமாக இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ், பந்தன் வங்கியின் ஒரு பங்கு வாயிலான வருவாய் தொடர்பான தனது மதிப்பீட்டை 2023-24 மற்றும் 2024-25ம் நிதியாண்டுக்களுக்கு முறையே 14 சதவீதம் மற்றும் 5 சதவீதம் குறைத்துள்ளது.


Click it and Unblock the Notifications