ஒரே வருடத்தில் 38% உயரப்போகும் வங்கி பங்குகள்.. கரூர் வைஸ்யா டு கோட்டக் வங்கி.. வாங்கி போடுங்க.!!

சில நாட்களாக பங்குச்சந்தைகள் நஷ்டத்தில் இருந்ததால், வங்கித் துறை பங்குகளும் சரிவை சந்தித்தன. குறிப்பாக லார்ஜ் கேப் தனியார் துறை வங்கிப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதற்கிடையில், வரப்போகும் அடுத்த ஒரு வருடத்தில் 8 வங்கிப் பங்குகள் நல்ல வளர்ச்சிக்கான அறிகுறிகளைக் காட்டுவதாக சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதன்படி இவை அடுத்த 12 மாதங்களில் 38 சதவீதத்துக்கும் மேல் வருமானம் அளிக்க வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளனர்.

இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் எழுச்சி பெறுவதால் வங்கிப் பங்குகள் மீண்டும் கவனத்தை ஈர்க்கின்றன. 6 நாட்கள் தொடர் நஷ்டத்துக்குப் பிறகு, குறியீடுகள் நல்ல மீட்சியை கண்டுள்ளன. நிபுணர் மதிப்பீடுகளை உறுதிப்படுத்தும் வகையில், ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கும் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையால் வங்கிப் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.

 ஒரே வருடத்தில் 38% உயரப்போகும் வங்கி பங்குகள்.. கரூர் வைஸ்யா டு கோட்டக் வங்கி.. வாங்கி போடுங்க.!!

தற்போதைய சூழ்நிலையில், வல்லுநர்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு 8 வங்கி பங்குகளை பரிந்துரைக்கின்றனர். அதன்படி இவை 27-39 சதவீத லாபத்தை வழங்கும் என்று கணித்துள்ளனர். இந்த பங்குகள் சுமார் 40 நிபுணர்களின் பாசிட்டிவ் கருத்தை பெற்றுள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட்: 12 ஆய்வாளர்கள் கரூர் வைஸ்யா வங்கி பங்கு விலை அடுத்த 12 மாதங்களில் 38.5% அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர். இதற்கு வலுவான வாங்குதல் மதிப்பீட்டை கொடுத்துள்ளனர். இந்த நிறுவனம் மிட் கேப் வகையைச் சேர்ந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ. 16,180 கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 201ல் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கனரா வங்கி லிமிடெட்: பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் பங்கு விலை அடுத்த 12 மாதங்களில் 38.2 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக 15 ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதற்கும் வாங்குதல் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். இந்த லார்ஜ் கேப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 96,270 கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 106 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.

ஆக்சிஸ் வங்கி லிமிடெட்: 39 ஆய்வாளர்கள், ஆக்சிஸ் வங்கி லிமிடெட் அடுத்த ஆண்டில் 34.5% வளர்ச்சியை அடையும் என்று மதிப்பிட்டுள்ளனர். இதற்கும் வாங்குதல் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். இந்த லார்ஜ் கேப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.65 லட்சம் கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 1,180-க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

பேங்க் ஆஃப் பரோடா லிமிடெட்: இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா லிமிடெட் பங்கு விலை அடுத்த 12 மாதங்களில் 33.3 சதவீதம் உயரும் என 30 ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வாங்குதல் மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. லார்ஜ்கேப் வகையைச் சேர்ந்த இதன் சந்தை மதிப்பு ரூ. 1.29 லட்சம் கோடியாக உள்ளது. தற்போது பங்கின் விலை ரூ. 249ல் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பெடரல் வங்கி லிமிடெட்: 31 ஆய்வாளர்கள் பெடரல் வங்கி பங்கு விலை அடுத்த 12 மாதங்களில் 33% உயரும் என கணித்துள்ளனர். இதற்கும் வாங்குதல் மதிப்பீட்டைக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லார்ஜ் கேப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 45,640 கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 186ல் வர்த்தகம் செய்யப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி லிமிடெட்: 39 ஆய்வாளர்கள் ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் பங்கு விலை அடுத்த ஆண்டில் 30.2 சதவீதம் உயரக்கூடும் என்று கணித்துள்ளனர். இதற்கும் வாங்குதல் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். இந்த லார்ஜ் கேப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 8.85 லட்சம் கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 1,258-ல் வர்த்தகமாகி வருகிறது.

கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட்: 37 ஆய்வாளர்கள் அடுத்த 12 மாதங்களில் கோடக் மஹிந்திரா வங்கி இன் பங்கு விலை 27.5% அதிகரிக்கும் என கணித்துள்ளனர். இதற்கும் வாங்குதல் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். இந்த லார்ஜ் கேப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.61 லட்சம் கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 1,814-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சிட்டி யூனியன் வங்கி லிமிடெட்: 20 ஆய்வாளர்கள் சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் பங்கு விலை 12 மாதங்களில் 27.1 சதவீதம் அதிகரிக்கலாம் என்று கணித்துள்ளனர். இதற்கும் வாங்குதல் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். இந்த நிறுவனம் மிட் கேப் வகையைச் சேர்ந்தது, இதன் சந்தை மதிப்பு ரூ. 11,630 கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 157ல் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்த தரவுகள் வருவாய்கள், அடிப்படைகள், ஒப்பீட்டு மதிப்பீடு, ஆபத்து மற்றும் விலை வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் வல்லுநர்கள் இந்தப் பங்குகளை பரிந்துரைத்துள்ளனர்.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+