தமிழகம் முதல் வட இந்தியா வரை வெயில் இப்போதே சதமடிக்க தொடங்கி விட்டது. 2026-ம் ஆண்டின் கோடைக்காலம் வழக்கத்தை விட கூடுதலாக சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வுகள் எச்சரிக்கும் வேளையில், பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இது ஒரு ஹாட் ஆன முதலீட்டு வாய்ப்பாக மாறியுள்ளது.
வெப்பம் அதிகரிக்கும் போது ஏசிகளின் தேவையும், அதற்கான மின்சார தேவையும், தாகத்தை தீர்க்கும் குளிர்பானங்களின் விற்பனையும் ராக்கெட் வேகத்தில் உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலை சாதகமாக்கி, சந்தையில் வின்னர்களாக உருவெடுக்க காத்திருக்கும் அதானி பவர் (Adani Power), வோல்டாஸ் (Voltas) மற்றும் வருண் பெவரேஜஸ் (Varun Beverages) போன்ற முன்னணி நிறுவன பங்குகள் கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது.

சுட்டெரிக்கும் வெயிலிலும் உங்கள் போர்ட்ஃபோலியோவை குளிர்ச்சியாக வைத்திருக்க போகும் அந்த பங்குகள் எவை? இந்த சம்மர் சீசனில் எந்தெந்த துறைகள் அதிக லாபம் தரும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
IMD அறிக்கையின் படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் முதல் மே 2026 வரையிலான காலகட்டத்தில் வெப்பமானது, வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது. ஏற்கனவே பல பகுதிகளில் வழக்கத்தை விட 4 - 8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது இந்த சம்மர் சீசனில் இன்னும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் வெப்பமானது மின்சார தேவையை அதிகரிக்கலாம் என்றும், இது 283 ஜிகாவாட் வரையில் செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024 கோடையில் பதிவான 250 ஜிகாவாட்டை காட்டிலும் 13% அதிகமாகும். இதன் காரணமாக மின்சார துறை சார்ந்த நிறுவனங்கள் பலன் அடையலாம். மேலும் ஏசி மற்றும் பேன் உற்பத்தியாளர்களும் பலன் அடையலாம்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்துக்கு மத்தியில் கேஸ் தட்டுப்பானது நிலவி வருகிறது. மேலும் கோடை காலத்தில் நீர் மின் நிலையங்களிலும் மின்சார உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிலக்கரி உற்பத்தியில் மூலம் இயங்கும். ஆக நிலக்கரி சார்ந்த வணிகங்களும் இந்த கோடை காலத்தில் பலன் அடையலாம்.
ஏற்கனவே கடந்த வாரத்தில் பிஎஸ்இ பவர் மற்றும் பிஎஸ்இ பயன்பாடு குறியீடுகளானது 2 - 3% வரையில் ஏற்றம் கண்டன. இதனிடையே அதிகரித்து வரும் தேவை மத்தியில் மின் உற்பத்தி நிறுவனங்களான என்டிபிசி, டாடா பவர், அதானி பவர் உள்ளிட்ட நிறுவனங்கள் பலன் அடையலாம்.
இதுகுறித்து ஜே.எம் ஃபைனான்ஷியல் நிறுவனமானது அதானி பவர், டாடா பவர், என்டிபிசி, அதானி கிரீன் எனர்ஜி, கோல் இந்தியா, ஜே.எஸ்.டபள்யூ எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவையாக கூறியுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பத்தின் மத்தியில் ஏசி போன்ற உற்பத்தியாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக பார்க்கப்படுகின்றன. இந்த சமயத்தில் அவற்றின் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். கட்டணங்களும் நிலையானதாக இருக்கும். மொத்தத்தில் இது அவற்றின் வருவாயை அதிகரிக்கும் விதமாக இருக்கும். அந்த வகையில் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளாக பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட், ப்ளூ ஸ்டார், ஹெவல்ஸ், ஓரியண்ட் எலக்ட்ரிக், கிராம்ப்டன் கிரீவ்ஸ், வோல்டாஸ் உள்ளிட்ட பங்குகளை வாங்கலாம் என ஆனந்த தரதி தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
கோடை காலத்திற்கு ஏற்ற ஐஸ் கிரீம் போன்ற உணவு பொருட்கள் சார்ந்த உற்பத்தியாளர்களான வரும் பெவரேஜஸ், இமாமி லிமிடெட் போன்றவை சிறப்பாக வளர்ச்சி காணலாம். இவற்றோடு ஹட்சன் அக்ரோ, வடிலால் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகளும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் தேவை அதிகரிப்பு, மறுபுறம் பணவீக்கம் காரணமாக உற்பத்தி செலவு அதிகரிப்பு, உற்பத்தி குறைப்பு என பல காரணிகளும் இந்த கோடை காலத்தை இன்னும் ஹாட்டான ஒன்றாக மாற்றலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications