இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை உருவாக்க அரசு நிறுவனமான பிஇஎம்எல் (BEML) ரூ.866.87 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதனால், இன்று பங்குகள் ஆரம்ப வர்த்தகத்தில் 8 சதவீதம் உயர்வைக் கண்டன. கடந்த ஓராண்டில் இந்த பங்கு 60 சதவீதம் லாபத்தை பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளது.
இந்திய ரயில்வேக்கான ரயில்களை தயாரிக்கும் அரசு நிறுவனமான இன்டெக்ரல் கோச் பேக்டரி (ICF) புல்லட் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை பொதுத்துறை நிறுவனமான பிஇஎம்எல் நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. பிஇஎம்எல் நிறுவனம் தலா 8 பெட்டிகள் கொண்ட 2 அதிவேக ரயில் பெட்டிகளை உருவாக்க ரூ.866.87 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் புல்லட் ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை ஆனது மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. இந்திய ரயில்வேக்கான ரயில்களை தயாரிக்கும் அரசு நிறுவனமான இன்டெக்ரல் கோச் பேக்டரி-ஐசிஎஃப் பொதுத்துறை நிறுவனமான பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு புல்லட் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் முதல் உள்நாட்டு புல்லட் ரயிலை தயாரிக்கும். பிஇஎம்எல் இன் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது.
ரூ.866.87 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற BEML: அரசு நிறுவனமான பிஇஎம்எல் நிறுவனம் தலா 8 பெட்டிகள் கொண்ட இரண்டு அதிவேக ரயில் பெட்டிகளை உருவாக்க ரூ.866.87 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிஇஎம்எல் உற்பத்தி மற்றும் அவற்றின் வடிவமைப்பு ஆகிய பணிகளை செய்யும்.
இரண்டு அதிவேக ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான ஆர்டரை சென்னை ஐசிஎஃப் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளதாக பிஇஎம்எல் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஒரு ரயில் பெட்டியில் 8 பெட்டிகளும், ஒரு பெட்டியும் 27.86 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ. 866.87 கோடி ஆகும். இதில் வடிவமைப்பு செலவு, ஒரு முறை மேம்பாட்டு செலவு, தொடர்ச்சியான கட்டணங்கள், சாதனங்கள், கருவிகள் மற்றும் சோதனை வசதி ஆகியவை அடங்கும்.
மணிக்கு 280 கிமீ வேகத்தில் சோதனை நடத்தப்படும்: இந்த திட்டம் இந்தியாவின் அதிவேக ரயில் முயற்சியின் ஒரு பகுதியாகும். இது நவீன வசதிகளுடன் ரயில் பயண அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் முதல் உள்நாட்டு புல்லட் ரயில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு ரயில்களும் பெங்களுருவில் உள்ள பிஇஎம்எல் இன் ரயில் கோச் வளாகத்தில் தயாரிக்கப்பட்டு இந்த ரயில்கள் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் டெலிவரி செய்யப்படும்.
பிஇஎம்எல் நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு உயர்மட்ட 'அட்டவணை A' நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு, ரயில், மின்சாரம், சுரங்கம் மற்றும் கட்டுமானம் போன்ற இந்தியாவின் முக்கிய தொழில்களுக்கு ஆதரவளிப்பதில் நிறுவனம் முக்கியமானதாகும்.
இதற்கிடையில், கடந்த ஓராண்டில் பிஎம்இஎல் பங்கு ரூ. 60.31% அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது. இதற்கிடையில், இன்றைய வர்த்தகத்தில் சிறப்பான ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி இன்றைய வர்த்தகம் முடிவு நேரத்தில் பிஇஎம்எல் பங்குகள் 3.60% அதிகரித்து ரூ.3855.35 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications