அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திவைத்ததையடுத்து, சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் நிலவரம் நன்றாக உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து 3வது வர்த்தக தினமாக நேற்றும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. நேற்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 309 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 108 புள்ளிகளும் உயர்ந்தது.
இந்த சூழ்நிலையில், இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாகவே இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று மோதிலால் ஓஸ்வால் வெல்த் மேனேஜ்மெண்ட் ஆராய்ச்சி பிரிவு தலைவர் சித்தார்த்த கெம்கா தெரிவித்தார். இந்நிலையில், இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்து நல்ல ஆதாயம் பெற வாய்ப்புள்ள ரூ.100க்கும் குறைவான மதிப்புள்ள 3 பங்குகளை முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

பங்கு தரகு நிறுவனமான பிரபுதாஸ் லில்லாதரின் தொழில்நுட்ப ஆராய்ச்சி துணைதலைவர் வைஷாலி பரேக், இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்துக்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா பங்கினைபரிந்துரை செய்துள்ளார். பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா பங்கை ரூ.47.40 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் விலை ரூ.52ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.45 என்று வைஷாலி பரேக் தெரிவித்தார். மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா பங்கின் விலை ரூ.47.53ஆக இருந்தது
இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் டிசிடபூள் (DCW) மற்றும் ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் ஆகிய பங்குகள் நல்ல ஆதாயம் தர வாய்ப்புள்ளதாக ஹென்செக்ஸ் செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சி பிரிவின் ஏவிபி மகேஷ் எம் ஓஜா கணித்துள்ளார். ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் DCW நிறுவன பங்கினை ரூ.84 முதல் ரூ.85.50 வரையிலான விலையில் வாங்கலாம்.
இப்பங்கின் விலைகள் ரூ.89,ரூ.92, ரூ.95ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.73.80ஆக கணிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் DCW நிறுவன பங்கின் விலை ரூ.85.47ல் முடிவுற்றது.
பங்குச் சந்தையில் இன்று ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் பங்குகளை ரூ.76-ரூ.78 வரையிலான விலைகளில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலைகள் ரூ.80, ரூ.82, ரூ.85 மற்றும் ரூ.90ஆக கணிக்கப்பட்டுள்ளது. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.73.80ஆகும். மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நிறுவன பங்கின் விலை ரூ.78.74ல் நிலைகொண்டது. இன்ட்ராடே வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் ஸ்டாப் லாஸ் பயன்படுத்தி வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications