இந்தியர்கள் தலைமுறை தலைமுறையாக தங்கத்தில் தான் முதலீடு செய்து வருகின்றனர். இன்றளவும் தங்கத்தில் போட்டால் அது கண்டிப்பாக அதிக ரிட்டன்ஸ் தரும் என்ற மனநிலை மாறவில்லை. ஆனால் மக்கள் தங்கத்தை வாங்கும் விதம்தான் மாறுபட்டுள்ளது. ஒரு சிலர் பிசிக்கல் கோல்டாக வாங்குகின்றனர். ஒரு சிலர் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 24 சதவீதம் வரை வருடாந்திர வருமானத்தை வழங்கிய கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளில் பல பிரச்சனை இருந்தது. பொருளாதார ஏற்ற இறக்கங்கள், பணவீக்கம் என பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஒரு சில கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி ஒரு சில ஃபண்டுகள் சுமார் 24 சதவீதம் வரையிலான வருடாந்திர வருமானத்தை வழங்கி இருக்கிறது.
தங்கத்தில் முதலீடு செய்யும் போது செய்கூலி, ஜிஎஸ்டி போன்றவற்றையெல்லாம் செலுத்த வேண்டும். ஆனால் கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் சுலபம். இதில் தூய்மை அல்லது செய்கூலி போன்ற விஷயங்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை. SIP முதலீடு செய்யலாம், விருப்பப்பட்டால் லம்சம் என்று சொல்லப்படுகிற மொத்த முதலீடும் செய்யலாம்.

ஏஞ்சல் ஒன் நிறுவனம் பகிர்ந்த சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, "டிஎஸ்பி வேர்ல்ட் கோல்ட் மைனிங் ஓவர்சீஸ் ஈக்விட்டி ஆம்னி FOF" என்ற ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 26.46 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த ஃபண்டில் மொத்தமாக இதுவரையில் ரூ.1,769.37 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோல்ட் ஃபண்ட் சர்வதேச நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே இதன் லாபம் தங்கத்தின் விலையை சார்ந்தில்லாமல், அந்தந்த நிறுவனங்களின் லாபம் மற்றும் பங்குச்சந்தையின் போக்கையும் பொறுத்து மாறுபடுகிறது.
உள்நாட்டு கோல்ட் ஃபண்டுகளும் கடந்த 5 ஆண்டுகளில் அதிக லாபத்தை வழங்கியுள்ளன. அந்த வகையில் எஸ்பிஐ கோல்டு ஃபண்ட் 25.06 சதவீதமும், குவாண்டம் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் 24.97 சதவீதமும், ஐசிஐசிஐ புருடென்ஷியல் கோல்டு இடிஎஃப் FOF 24.93 சதவீதமும், எச்டிஎஃப்சி கோல்டு இடிஎஃப் FOF 24.90 சதவீதமும், ஆதித்யா பிர்லா சன் லைஃப் கோல்ட் ஃபண்ட் 24.88 சதவீதமும், ஆக்சிஸ் கோல்ட் ஃபண்ட் 24.87 சதவீதமும், நிப்பான் இந்தியா கோல்ட் சேவிங்ஸ் ஃபண்ட் 24.73 சதவீதமும், கோடக் கோல்ட் ஃபண்ட் 24.73 சதவீதமும், எல்ஐசி எம்எஃப் கோல்ட் இடிஎஃப் எஃப்ஓஎஃப் 24.70 சதவீதமும் வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளன.
ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்-இன் கடந்த கால பர்பாமென்ஸை வைத்து இனிவரும் காலத்திலும் அவை அதேபோல வருமானத்தை வழங்கும் என்று கூறி விட முடியாது. உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பம் இருந்தால் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி, ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள். இந்த பதிவு வெறும் தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications