இந்திய பங்குச்சந்தையில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை கொண்டு இருக்கும் மைக்ரோகேப் பங்குகள் தற்போதைய சந்தையில் ராக்கெட்டுகள் போன்றிருப்பதால் அவை முதலீட்டாளர்களுக்கு பலமடங்கு வருவாயைப் பெற்றுத் தருகின்றன. இவை சிறியவையாக இருந்தாலும் அவற்றின் லாப வளர்ச்சி சிறிய அளவில் இருந்து மிகப்பெரிய அளவுக்கு உயர்கிறது.
இதைத் தான் சின்னக்கல் பெத்த லாபம் என்கின்றனர். இருப்பினும் மைக்ரோகேப் பிரிவில் இருக்கும் ஏகப்பட்ட கம்பெனிகளில் இதுபோன்ற வளர்ந்து வரும் பங்குகளைக் கண்டறிவது கஷ்டமாகும். இந்தக் கட்டுரையில் ரூ.50க்குக் குறைந்த சிறந்த மைக்ரோகேப் பங்குகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

5 வெவ்வேறு கம்பெனிகள் அந்த மைக்ரோகேப் பங்குகளின் மாடல்கள், கீ மெட்ரிக்ஸ், பலங்கள், அண்மைக்கால வளர்ச்சிகள் பற்றி ஆராய்ந்து பட்டியலிடப்பட்டு உள்ளது.
சி.கே.பிர்லா குரூப்பில் ஒரு அங்கம் ஓரியன்ட் பேப்பர் அண்டு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் இதுதான் இந்தியாவின் மிகப் பெரிய டிஷ்யூ பேப்பர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாகும்.
பலதரப்பட்ட பயன்பாடுகளுக்குத் தேவையான அனைத்து காகிதம் மற்றும் காகிதம் சார்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. கேட்ரிட்ஜ் பேப்பர், டிராயிங் பேப்பர், கப் ஸ்டாக், எம்எப் கவர் பேப்பர், பல்ப்போர்டு, ஹெச்ஆர்டி டவல், ஐஸ்கிரீம் பேப்பர் இன்னும் ஏராளமானவை இதில் அடங்கும். ஓரியண்ட் பேப்பர் நிறுவனத்துக்கு ஒரு உற்பத்தி ஆலை மற்றும் 5 அலுவலகங்கள் உள்ளன.
இந்தியாவில் 21 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களுக்கு இதன் தயாரிப்புகள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
மேலும் உலகளவில் இந்த நிறுவனம் 11.3 சதவீத வருவாயைப் பெறுகிறது. 8 வெளிநாடுகளில் வியாபாரத்தை செய்கிறது.
பேப்பர் மற்றும் டிஷ்யூ வியாபாரத்துடன் ஓரியண்ட் நிறுவனம் காஸ்டிக் சோடா தயாரிக்கும் ஒரு கெமிக்கல் டிவிஷனையும் வைத்திருக்கிறது. FY23 மொத்த வருவாயில் பேப்பர் மற்றும் டிஷ்யூ, கெமிக்கல் டிவிஷன் ஆகியவை தலா 81.71 சதவீதம், 17.37 சதவீதத்தை கொண்டுள்ளன.
ஓரியண்ட் நிறுவனத்தின் ரூ.50க்கு குறைவான மைக்ரோகேப் பங்குகளின் சந்தை மூலதனம் ரூ.1039.71 கோடியாக இருக்கிறது. ரூ.943 கோடி விற்பனை மூலம் ஓரியன்ட் நிகர லாபமாக ரூ.99 கோடியை சம்பாதித்துள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு1988 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட XT Global Infotech இன்பர்மெஷன் டெக்னாலஜி, பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங், கன்சல்டிங் சர்வீஸ்களில் முன்னணியில் உள்ளது. ஆரக்கிள் கிளவுட், ஆரக்கிள் இன்டகிரேஷன், ஆரக்கிள் அனலிடிக்ஸ், அப்ளிகேஷன் டிரான்ஸ்பர்மேஷன் மேனேஜ்மென்ட், கிளவுட் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர், ஏபி ஆட்டோமேஷன், டிஜிட்டல் பிசினஸ் சர்வீஸ்கள் இன்னும் பல சேவைகளை XT Global Infotech அளிக்கின்றது.
இந்த டெக்னாலஜி கம்பெனியின் நிகர லாபம் FY20இல் ரூ. 4 கோடியில் இருந்து FY23இல் நான்கு மடங்கு அதிகரித்து ரூ.16 கோடி ஆனது.
XT Global Infotech 62.8 சதவீதம் ஹையர் புரோமோட்டர் ஹோல்டிங்கை வைத்துள்ளது. தற்போது அதன் மதிப்பு ரூ.534.53 கோடியாகும்.
இதேபோல் பல்வேறு சந்தை வல்லுனர்கள் 50 ரூபாய்க்கு குறைவான பங்குகளை பட்டியலிட்டு உள்ளது. இந்த பங்குகளை முறையாக ஆய்வு செய்து உங்களுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் முதலீடு செய்யுங்கள். ஒவ்வொரு சந்தை வல்லுனர்களின் ஆய்விலும் பல வித்தியாசம் இருக்கும், இதற்கும் உங்களுடைய சொந்த ரிஸ்க் அளவீடுகளும் மாறுபடும்.
ஓரியண்ட் பேப்பர் & இண்டஸ்ட்ரீஸ் - பங்கு விலை 48.95 ரூபாய் - 1,039.71 கோடி ரூபாய் சந்தை மதிப்பு.
XT குளோபல் இன்ஃபோடெக் - பங்கு விலை 40.1 ரூபாய் - 534.53 கோடி ரூபாய் சந்தை மதிப்பு.
BMW இண்டஸ்ட்ரீஸ் - பங்கு விலை 46.52 ரூபாய் - 1,047 கோடி ரூபாய் சந்தை மதிப்பு.
Virinchi - பங்கு விலை 35.2 ரூபாய் - 320.03 கோடி ரூபாய் சந்தை மதிப்பு.
Wardwizard இன்னோவேஷன்ஸ் & மொபிலிட்டி - பங்கு விலை 40.1 ரூபாய் - 1,047.99 கோடி ரூபாய் சந்தை மதிப்பு.
மெகாசாஃப்ட் - பங்கு விலை 50 ரூபாய் - 379 கோடி ரூபாய் சந்தை மதிப்பு.
புதும்ஜீ பேப்பர் தயாரிப்புகள் - பங்கு விலை 49.7 ரூபாய் - 471.71 கோடி ரூபாய் சந்தை மதிப்பு.
கோத்தாரி சுகர்ஸ் & கெமிக்கல்ஸ் - பங்கு விலை 60 ரூபாய் - 506 கோடி ரூபாய் சந்தை மதிப்பு.
விஐபி ஆடை - பங்கு விலை 44 ரூபாய் - 363 கோடி ரூபாய் சந்தை மதிப்பு.
மனக்ஸியா ஸ்டீல்ஸ் - பங்கு விலை 43 ரூபாய் - 279 கோடி ரூபாய் சந்தை மதிப்பு.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?



Click it and Unblock the Notifications