ஏற்ற இறக்கம் நிறைந்த பங்கு சந்தை நிலவரத்தில் SIP பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குறைந்த முதலீட்டுத் தொகையுடன் அதாவது 500 ரூபாய் என்ற SIP முதலீட்டுத் தேர்வுகளில் விருப்பம் உள்ளவர்களுக்கு அவர்கள் குறிக்கோள் மற்றும் ரிஸ்க் ஆகியவற்றைப் பொறுத்து சில விருப்பங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இப்போது காணலாம்.
எஸ் பி ஐ ஈக்விட்டி ஹைப்ரிட் நிதி வளர்ச்சி :
ஒவ்வொரு மாதமும் ரூபாய்.500/- முதலீட்டில் குறைந்த அபாயத்துடன் நல்ல நிலையான வருமானத்தைத் தேடுகிறீர்கள் என்றால் நிச்சயமாக இந்த முதலீட்டில் நீங்கள் சேரலாம்.
ஹைபரிட்-ஈக்விட்டி சார்ந்த திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள நிதி ஏப்ரல் 30, 2018 அன்று ரூ.23,581 கோடி.
கடைசி ஒன்று, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளில் முறையே 9.55%, 12..35%, 16.47% நிதி வருவாய் வழங்கப்படுகிறது. SIP முதலீட்டில் குறைந்தபட்சம் பிரதி மாதம் ரூபாய் . 500/- மற்றும் குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 1000/- என்று வகுக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி, எஸ்.பி.ஐ., பார்தி ஏர்டெல், கோடக் மஹிந்திரா வங்கி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தவை. எச்.டி.எஃப்.சி வங்கி 2018 வைப்புச் சான்றிதழ், 7.17% GOI 2028 ஜி-செக்யூரிட்டிஸ் மற்றும் 9.15% ஐசிஐசிஐ வங்கபற்றுச்சீட்டு ஆகியவை கடன் வழங்குவதில் முதலிடம் பெற்றவையாக உள்ளன.
இந்த வளர்ச்சி திட்டத்தின் நிகரச் சொத்து மதிப்பு ரூ. 125.56 ஆகும். அதே நேரத்தில் டிவிடென்ட் திட்டங்களுக்கு ரூ. 28.36.
HDFC சமநிலை நிதி:
எச்.டி.எஃப்.சி. பரஸ்பர நிதிப் பங்கிடமிருந்து மற்றொரு நிதியுதவி இது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூபாய் . 500/- இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம். ஒரு வருட காலத்திற்குப் பிறகு 8.72% வருவாய் மற்றும் ஐந்து வருட காலத்திற்குப் பிறகு 18% வருவாய் வழங்கப்படுகிறது.
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, எச்டிஎஃப்சி, இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்குகளும் இதன் முன்னணி பங்குகளில் அடங்கும். இதன் கடன் பத்திரங்களில் சில , 7.4% டாடா சன்ஸ் 2022 பற்றுச்சீட்டு , 2045 ஆம் ஆண்டில் முதிர்ச்சி கொண்ட 8.13% GOI பத்திரங்கள் மற்றும் ICICI வங்கி 2018 CD போன்ற பத்திரங்களை உள்ளடக்கியது.
இந்த வளர்ச்சி திட்டத்தின் நிகரச் சொத்து மதிப்பு ரூ. 147.08 ஆகும். அதே நேரத்தில் டிவிடென்ட் திட்டங்களுக்கு ரூ. 30.65
UTI ஈக்விட்டி ஃபண்ட் வழக்கமான திட்டம்:
UTI இன் இந்தப் பரஸ்பர நிதித் திட்ட நிதி அளவு மார்ச் 31, 2018 அன்று ரூ. 5272 கோடி .
இந்தத் திட்டத்தில் 98% நிதி ஈக்விட்டி பங்குக்குத் திருப்பப்படுகிறது, இதர நிதி, கடன் போன்ற தேவைகளுக்குத் திருப்பப்படுகிறது. ஆகவே அதிக அபாயங்களை ஏற்றுக் கொள்ளும் விருப்பம் உள்ளவர்கள் இந்த நிதியைத் தேர்வு செய்யலாம். ஒரு பெரிய முதலீட்டு நிதி என வகைப்படுத்தப்பட்ட, இந்தத் திட்டம் S & P BSE 200 குறியீட்டைக் கண்காணிக்கும்.
இந்த வளர்ச்சி திட்டத்தில் நிகரச் சொத்து மதிப்பு 136.91.
பரவலாக்கப்பட்ட ஈக்விடி வெளியில் ,இந்த நிதி முதலீட்டிற்குக் கிரிசில் 4 வது ரேங்க் வழங்கியுள்ளது. முதல் வருடத்தின் முடிவில் இதன் வருவாய் 18%. பஜாஜ் ஃபினான்ஸ், இண்டஸ்ஐண்ட் பாங்க், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, யெஸ் பாங்க் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களில் பங்குகள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. தனி நபர் ரூபாய். 500 செலுத்தி இந்தத் திட்டத்தில் இணையலாம். குறைந்த பட்ச முதலீட்டுத் தொகை ரூபாய். 5000/-
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் ப்ளூ சிப் ஈக்விட்டி:
கடந்த பல ஆண்டுகளாக அதிக முதலீட்டு ஈக்விட்டி நிதிகள் நல்ல வருவாய் பெற்றுள்ளன. 5 வருட முடிவில் இந்த முதலீட்டில் 15.72% வருவாய்க் கிடைக்கிறது. இந்தத் திட்டம் 2008ம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் இதன் வருவாய் 14.76% உள்ளது. இந்தத் திட்டத்தின் நிகரச் சொத்து மதிப்பு ரூபாய்.39.57. மற்றும் டிவிடென்ட் மதிப்பு 21.91.டிவிடென்ட் தொகைக்கு நிதி நிறுவனம் விநியோக வரி செலுத்த வேண்டும். இப்போது மூலதன ஆதாய வரி கூட உள்ளது, இது இப்போது ஈக்விட்டி பரஸ்பர நிதியில் செய்யப்பட்ட இலாபத்தில் இருந்து செலுத்தப்படுகிறது.
இத்திட்டம், குறியீட்டு நிஃப்டி 50 மொத்த ரிட்டர்ன் இன்டெக்ஸைக் கண்காணிக்கிறது.
DSP ப்ளக்ராக் குறைந்த முதலீட்டு நிதி - வழக்கமான திட்டம் :
இந்தக் குறைந்த முதலீட்டுத் திட்டத்தில் 3 மற்றும் 5 ஆண்டுகளில் 16.81% மற்றும் 31.67% வருவாய் வழங்கப்படுகிறது. சிறிய மூலதன நிதி பெரிய மூலதன நிதிகள் மீது மிகவும் அபாயகரமானதாக இருப்பதைக் குறிக்க வேண்டும், ஒட்டுமொத்த சந்தையுடன் ஒப்பிடுகையில் அவை கூர்மையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன.
இந்தத் திட்டத்தின் நிகரச் சொத்து மதிப்பு ரூபாய். 63.09.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications