நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க சிறந்த பென்னி பங்குகள்.. உங்கள் வசம் இருக்கா?

பென்னி பங்குகள் என்பது பங்கு சந்தையில் முதலீடு செய்து வரும் பலருக்கும் தெரிந்திருக்கலாம். பொதுவாக பென்னி பங்குகள் பொதுவாக 10 ரூபாய்க்கு கீழாக அல்லது மிக குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகளாகும். இதே அண்டை நாடுகளில் 5 டாலருக்கும் கீழாக வர்த்தகமாகும் பங்குகள் பென்னி பங்குகள் என அழைக்கப்படுகின்றன.

பொதுவாக இத்தகைய பங்குகள் மிக ரிஸ்கானது என கூறப்படுகின்றது. இது அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் பொருந்தாது. ஆக பென்னி பங்கினில் முதலீடு செய்வதற்கு முன்பு நிபுணர்களின் ஆலோசனையுடன் வாங்குவது நல்லது.

பொதுவாக பங்கு சந்தை பற்றி கற்றுக் கொள்ள நினைப்பவர்கள்,இத்தகைய பங்குகளில் குறைவான முதலீட்டினை செய்யலாம். இதில் நஷ்டமானாலும் குறைவாகவே இருக்கும். லாபம் என்றாலும் குறுகிய காலம் எனும் போது சிறிய அளவிலேயே இருக்கும். மொத்தத்தில் சந்தைய பற்றி கற்றுக் கொள்ள இது ஏதுவான ஒன்றாகும்.

என்னென்ன பங்குகள்?

என்னென்ன பங்குகள்?

நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க சிறந்த 8 பென்னி பங்குகள் எது? ஏன் நிபுணர்கள் இந்த பங்கினை வாங்க பரிந்துரை செய்கிறார்கள்? என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.

இதில் வோடபோன் ஐடியா லிமிடெட்

அலாக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

ஜம்மு & காஷ்மீர் பேங்க் லிமிடெட்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

பேங்க் ஆப் மகாராஷ்டிரா லிமிடெட்

டிஸ் டிவி இந்தியா லிமிடெட்

மோர்பென் லேபாரட்டீஸ்

யெஸ் பேங்க் லிமிடெட்

வோடபோன் ஐடியா லிமிடெட்

வோடபோன் ஐடியா லிமிடெட்

இந்திய டெலிகாம் துறையை சேர்ந்த வோடபோன் ஐடியா லிமிடெட் டெலிபோன் சேவையை வழங்கும் ஒரு நிறுவமனாகும். இது மொபைலிட்டி சேவை மற்றும் பிராட்பேண்ட் சேவையினையும் வழங்கி வருகின்றது. தற்போது 4ஜி மற்றும் 5ஜி என அடுத்தடுத்த கட்டத்திற்குள் நுழையும் இந்த நிறுவனம், ஆரம்பத்தில் போட்டியினை சமாளிக்க முடியாமல் பெரும் சரிவினைக் கண்டது. எனினும் தொடர்ந்து முதலீட்டினை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதோடு இதன் பங்கினை அரசுக்கு விற்பனை செய்யலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக அடுத்தகட்ட வளர்ச்சியினை நோக்கியும் வோடபோன் களமிறங்கியுள்ளது. இதற்கிடையில் பென்னி பங்குகினில் இதுவும் வாங்க சிறந்த பங்காக பார்க்கப்படுகிறது.

அலோக் இண்டஸ்ட்ரீஸ்

அலோக் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவினை சேர்ந்த அலோக் இண்டஸ்ட்ரீஸ் டெக்ஸ்டைல் துறையை சேர்ந்த நிறுவனமாகும். இது காட்டன் மற்றும் பாலியெஸ்டர் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் நூல் முதல் பாலியெஸ்டர் துணிகள் எனப் பல தரப்பட்ட பொருட்களை உற்பத்தி செயது வருகின்றது. தனது உற்பத்தியில் கால்பகுதியினை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த நிறுவனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு நிதி சிக்கல்களில் சிக்கி வந்த நிலையில், இதன் பங்கு விலையானது பலத்த சரிவினைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு & காஷ்மீர் வங்கி

ஜம்மு & காஷ்மீர் வங்கி

வங்கி துறையில் செயல்பட்டு வரும் ஜம்மு & காஷ்மீர் வங்கி, கடன், பர்சனல் அக்கவுண்ட், டெர்ம் டெபாசிட், சில்லறை வர்த்தகம், மற்ற செயல்பாடுகள், வீடு மற்றும் வீட்டு கடன், கல்விக் கடன், வாகன கடன் மற்றும் விவசாய கடன் என பலவற்றையும் வருகின்றது.
இந்த வங்கி பங்கின் விலையானது அதிக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில் இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளாக நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். '

கவனத்தில் கொள்ள வேண்டியவை

கவனத்தில் கொள்ள வேண்டியவை

இது தவிர இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, யெஸ் வங்கி, டிஸ் டிவி இந்தியா லிமிடெட்,மோர்பென் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகளும் இதில் அடங்கும். யெஸ் வங்கியும் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ள ஒரு தனியார் வங்கியாக உள்ளது. மொத்தத்தில் இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்காக உள்ளது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+