மியூச்சுவல் ஃபண்டுகளில் ஸ்மால் கேப் ஃபண்டுகளும் அண்மை காலமாக சிறந்த லாபம் அளிக்கும் திட்டங்களாக உள்ளன. பெரும்பாலான தொகையை சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி திட்டங்களில் சிறந்த திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்..
ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபண்டு : இந்த நிதியின் மதிப்பு 19,530 கோடி ரூபாயாகும். இதன் எக்ஸ்பென்ஸ் ரேசியோ 1.63%ஆகும். அதாவது 100 ரூபாய் முதலீட்டில் 1.63 ரூபாயை நிறுவனம் எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒரே முறை 10,000 ரூபாய் முதலீடு செய்தால் ஓராண்டில் அது 13,754 ரூபாயாகவும், 5 ஆண்டுகளில் 32,112 ரூபாயாகவும் வளர்ச்சி காணும். எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால் மாதத்திற்கு 1,000 என போடும் போது ஓராண்டில் 12,000 ரூபாய் முதலீடு 14,000ஆகவும், 5 ஆண்டுகளில் 60,000 ரூபாய் முதலீடு 1,18,185ஆகவும் அதிகரிக்கும்.இந்த நிதியில் 50% க்கும் மேல் சிறு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்டு: எஸ்பிஐ வங்கி ஸ்மால் கேப் ஃபண்டு இது. இதன் மதிப்பு 24,861.53 கோடி. எக்ஸ்பென்ஸ் ரேசியோ 1.63% ஆகும். இதில் ஒரே முறை 10,000 ரூபாய் முதலீடு செய்தால் ஓராண்டில் அது 13,383 ரூபாயாகவும், 5 ஆண்டுகளில் 30,008 ரூபாயாகவும் வளர்ச்சி காணும். எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால் மாதத்திற்கு 1,000 என போடும் போது ஓராண்டில் 12,000 ரூபாய் முதலீடு 14,001ஆகவும், 5 ஆண்டுகளில் 60,000 ரூபாய் முதலீடு 1,16,735ஆகவும் அதிகரிக்கும்.
கோடக் ஸ்மால் கேப் ஃபண்டு: இதன் மதிப்பு 14,425 கோடி ரூபாய். எக்ஸ்பென்ஸ் ரேசியோ 1.65% ஆகும். இதில் ஒரே முறை 10,000 ரூபாய் முதலீடு செய்தால் ஓராண்டில் அது 13,344 ரூபாயாகவும், 5 ஆண்டுகளில் 31228 ரூபாயாகவும் வளர்ச்சி காணும்.
எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால் மாதத்திற்கு 1,000 என போடும் போது ஓராண்டில் 12,000 ரூபாய் முதலீடு 13,740ஆகவும், 5 ஆண்டுகளில் 60,000 ரூபாய் முதலீடு 1,19,680ஆகவும் அதிகரிக்கும்.
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு: இந்த நிதியின் மதிப்பு 45,894 கோடி ரூபாய். இதில் எக்ஸ்பென்ஸ் ரேசியோ 1.51% ஆக உள்ளது. இதில் ஒரே முறை 10,000 ரூபாய் முதலீடு செய்தால் ஓராண்டில் அது 15,197 ரூபாயாகவும், 5 ஆண்டுகளில் 35,987 ரூபாயாகவும் வளர்ச்சி காணும். எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால் மாதத்திற்கு 1,000 என போடும் போது ஓராண்டில் 12,000 ரூபாய் முதலீடு 14,814ஆகவும், 5 ஆண்டுகளில் 60,000 ரூபாய் முதலீடு 1,45,334ஆகவும் அதிகரிக்கும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications