முதலீட்டாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் 8000 சதவீதம் லாபம் தந்த ஒரு நிறுவனம் பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் பங்குகள் வழங்குவதற்கான தேதியை அறிவித்துள்ளது.
பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் என்ற மல்டி பேக்கர் நிறுவனம் குறித்து தான் தற்போது இந்திய சந்தையில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு இரண்டு சூப்பரான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஒன்று பங்கு பிரிப்பு மற்றொன்று போனஸ் பங்குகள் என்று அறிவிப்பாகும். பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவன பங்கின் மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 8000 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல நடப்பாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2,133 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு டிசம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி 1304 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இதுவே 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு வெறும் 57 ரூபாயாக தான்.
இப்படி அசுர வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த நிறுவனம் முதன்முறையாக தங்கள் நிறுவன பங்குகளை பிரிப்பதாகவும் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனம் சொத்துக்களை வாங்குவது ,விற்பனை செய்வது மற்றும் கட்டுமான பணிகளிலும் ,வேளாண் பொருட்களை கொள்முதல் செய்து பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளது . அண்மையில் தான் இந்த நிறுவனம் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றது.
குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். டாடா அக்ரோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வேளாண் பொருட்களை கொள்முதல் செய்து வழங்குவது என்ற பெரிய ஒப்பந்தத்தை பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் பெற்றுள்ளது.
பங்கு சந்தையில் ஏறுமுகமாகவே இந்த நிறுவனத்தின் பங்கு காணப்படுகிறது. இந்த நிலையில் கூடிய விரைவில் இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதன்படி 10 பங்குகள் வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு 8 பங்குகள் போனஸாக வழங்கப்படும். அதாவது 10 பங்கு என்பது 18 பங்குகளாக மாறும். அது தவிர தங்கள் நிறுவன பங்குகளை 1:10 என்ற விகிதத்தில் பிரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.10 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட ஒரு பங்கினை 1 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட பத்து பங்குகளாக பிரிப்பதற்கு பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் முடிவு செய்துள்ளது.
இதற்கான ரெக்கார்டு தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது .இது தொடர்பாக பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் வாரியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் டிசம்பர் 26 ஆம் தேதி ரெக்கார்ட் தேதியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேதி அன்று இந்த நிறுவனத்தில் பங்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் போனஸ் பங்கு மற்றும் பங்கு பிரிப்புக்கு தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications