பங்குச் சந்தையில் மல்டிபேக்கர் ஸ்மால்கேப் வகையை சேர்ந்த பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 5% அதிகமாக உயர்ந்தது. நிறுவனம் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளதாக பங்குச் சந்தை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது. இதனையடுத்து பங்குகள் இன்று மேல்சுற்றில் வர்த்தகமானது.
இன்றைய பங்குச் சந்தை ஆனது பலத்த சரிவுடன் முடிந்தன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளையும், நிஃப்டி 310 புள்ளிகளையும் இழந்தன. அதேபோல், முதலீட்டாளர்கள் சுமார் ரூ.7.37 கோடியை இழந்துள்ளனர். இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வெளி நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேற்றியுள்ளனர். இது இந்த வாரம் வரவிருக்கும் அமெரிக்க ஃபெட் ரிசர்வ் வட்டி விகிதம் பற்றிய எதிர்பார்ப்புகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஆகியவை முக்கிய பங்குச் சந்தை சரிவிற்கு முக்கிய பங்காற்றுகின்றன.

இதற்கிடையில், பாரத் குளோபல் டெவலப்பர் பங்குகள் அக்ரி டெக் பிரிவில் முதல் மிகப்பெரிய ஆர்டரை மெக்கெய்ன் இந்தியா அக்ரோ நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதாக நிறுவனம் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது. இந்த ஆர்டரின் மதிப்பு சுமார் 300 கோடி ஆகும். இந்த ஆர்டரை நிறுவனம் நடப்பு நிதியாண்டில் தொடங்கி ஆறு மாத காலத்திற்குள் 200,000 டன் குஃப்ரி அசோகா உருளைக்கிழங்கு விநியோகத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாரத் குளோபல் டெவலப்பர்களின் பாரத் குளோபல் அக்ரோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. எனவே இந்த ஆர்டர் மூலம் நிறுவனம் இந்திய விவசாயத் துறையில் அதன் நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் பங்குகள் ரூ.743.30 ஆக தொடங்கிய நிலையில், இன்று 5% உயர்ந்து ரூ.780 ஆக முடிந்தது. அதேபோல், கடந்த ஆறு மாத்த்தில் பங்குகள் 448% உயர்விலும், கடந்த ஒரு வருடத்தில் சுமார் 4735% உயர்விலும் இருந்தன.
பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனம் முன்னதாக, பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் லிமிடெட் Kkrrafton Developers Itd என அழைக்கப்பட்டு வந்தது. இந்தியாவின் விவசாய துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரத் குளோபல் அதன் வெளியீட்டில் பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் லிமிடெட்டின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அக்ரிடெக் துறையில் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனம் அதன் குறிப்பிடத்தக்க வணிகத்தை விரிவாக்கம் செய்யாமல், 6 புதிய துணை நிறுவனங்களை நிறுவுவதாக அறிவித்துள்ளது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications