பங்குச் சந்தையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் பங்குச் சந்தையில் நல்ல லாபம் ஈட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. பங்குகள் குறித்த ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் பொறுமை தேவை.
பொதுவாக நல்ல லாபத்தை தரக்கூடிய மல்டிபேக்கர் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வார்கள். முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொட்டி கொடுத்த மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றுதான் பாரத் ரசாயன். ரசாயனங்கள் துறையை சேர்ந்த இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.

பாரத் ரசாயன் லிமிடெட் நிறுவனம் வேளாண்-வேதியியல் துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப தர பூச்சிக்கொல்லிகள் மற்றும் இடைநிலைகளை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 1989ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பெரிய அனுபவத்துடன் இத்துறையில் முன்னணியில் உள்ளது.
தொடர்ந்து லாபம் ஈட்டுவது, வருவாயில் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தில் முன்னேற்றம் போன்ற முதலீட்டாளர்கள் விரும்பும் அம்சங்கள் இந்நிறுவனத்தில் காணப்படுவதால் இது முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பப்படும் பங்குகளில் ஒன்றாக உள்ளது. இந்நிறுவன பங்கும் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
கடந்த 16 ஆண்டுகளில் பாரத் ரசாயன் பங்கு முதலீட்டாளர்களுக்கு 28,014 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2009ல் இப்பங்கின் விலை ரூ.9.40 என்ற அளவில் இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.11,096 என்ற அளவில் உள்ளது.
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.2.81 கோடியாக பெருகியிருக்கும். நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 107.74 சதவீதம் உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.2.09 லட்சமாக உயர்ந்திருக்கும்.
குறுகிய கால அடிப்படையில் இப்பங்கின் விலை ஏற்ற இறக்கமாக இருந்துள்ளது. கடந்த ஓராண்டில் பாரத் ரசாயன் நிறுவன பங்கின் விலை 28.75 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 2.50 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளது. இருப்பினும் கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 8.91 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2024 டிசம்பர் காலாண்டில் பாரத் ரசாயன் நிறுவனத்தின் நிகர லாபம் 164.73 சதவீதம் உயர்ந்து ரூ.40.53 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவன பங்கின் ஒரு பங்கு வாயிலான வருவாய் ரூ.36.85லிருந்து ரூ.97.54ஆக உயர்ந்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications