2025 ஐபிஓ-வின் ஆண்டு.. பங்குச் சந்தையில் என்ட்ரீ கொடுக்க ரெடியான 160 நிறுவனங்கள்..!

பொதுவாக நிறுவனங்கள் தங்களது வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பங்குச் சந்தையில் புதிய பங்குகளை வெளியிட்டு (ஐபிஓ) நிதி திரட்டுகின்றன. ஐபிஓ என்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போன்றது, ஐபிஓ வெளியிட்ட நிறுவனத்துக்கு தேவையான நிதியும் கிடைக்கும், சிறு முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமைகிறது.

சமீப ஆண்டுகளாக நிறுவனங்கள் ஐபிஓ வாயிலாக நிதி திரட்டுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தைகளில் ஐபிஓ வாயிலாக ஏராளமான நிறுவனங்கள் நிதி திரட்டின. இந்த ஆண்டிலும் அதிகளவில் ஐபிஓக்கள் நடைபெறும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன.

2025 ஐபிஓ-வின் ஆண்டு.. பங்குச் சந்தையில் என்ட்ரீ கொடுக்க ரெடியான 160 நிறுவனங்கள்..!

இந்திய பங்குச் சந்தைகளுக்கு கடந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்தது. கடந்த செப்டம்பரில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. ஆனால் அதன் பிறகு பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவு கண்டு வந்தன.

டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு, சர்வதேச புவியியல் பதட்டங்கள் போன்ற காரணங்களால் கடந்த பிப்ரவரி வரையிலான 5 மாதங்களும் பங்குச் சந்தைகளுக்கு இருண்ட காலமாக அமைந்தது. இருப்பினும் பங்குச் சந்தைகள் தற்போது சரிவிலிருந்து மீள தொடங்கியுள்ளன.

இந்த சூழ்நிலையில், ஐபிஓ-க்கள் வருவது, சந்தையில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை மதிப்பிடுவதற்கு உதவும். ஐபிஓ-க்கள் வெற்றி பெறும்பட்சத்தில் அடுத்தடுத்து வரும் பங்கு வெளியீடுகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய ஐபிஓ சந்தை மீண்டும் புத்துயிர் பெற தொடங்கியுள்ளது. 2025ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகளில் அதிகளவில் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி நிதி திரட்டும். இதன் மூலம் ஐபிஓவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற சர்வதேச சந்தைகளை இந்திய பங்குச் சந்தைகள் முந்தும்.

இந்த ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகளில் 160 நிறுவனங்கள் ஐபிஓவில் களமிறங்கும். மேலும் இந்நிறுவனங்கள் மொத்தம் 5,000 கோடி டாலர் திரட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மின்சார வாகனங்கள் துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் அதிகளவில் ஐபிஓவை மேற்கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

நிபுணர்களின் கணிப்பை உறுதி செய்வது போல் பல முன்னணி நிறுவனங்கள் ஐபிஓ மேற்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. உதாரணமாக, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான மீஷோ புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளது. இந்நிறுவனத்தின் ஐபிஓ தீபாவளியை ஒட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு தரகு நிறுவனமான குரோவ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு தனது இருப்பிடத்தை மாற்றியது. இந்நிறுவனம் அடுத்த சில மாதங்களில் தனது ஐபிஓவுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+