பீகார் தேர்தல் முடிவுகள்: முக்கிய கவனம் பெறும் நிறுவனங்கள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே நோட் பண்ணுங்க..!!

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக தொடங்கியுள்ள வேளையில் எக்சிட் போல் கணிப்புகள் இன்று பங்குச்சந்தை முதலீடுகளை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணியாக உள்ளது. எக்சிட் போல் முடிவுகளில் பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வெற்றி பெறும் என கணித்துள்ளன இதனால் தொடர்ந்து 3 நாட்களாக சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு உயர்வுடன் இருந்தது.

ஆனால் இன்கிரெட் எக்விட்டீஸ் போன்ற புரோக்கரேஜ் நிறுவனங்கள், பீகார் தேர்தலில் முடிகளில் எதிர்பாராத விதமாக என்டிஏ தோல்வி அடைந்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் அளவுக்கு பாதிப்பு உள்ளது என பங்குச்சந்தை முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளது. இது நடந்தால் நிஃப்டி 50 குறியீடு 5-7 சதவீதம் சரியலாம் எனவும் எச்சரிக்கின்றன.

பீகார் தேர்தல் முடிவுகள்: கவனம் பெறும் நிறுவனங்கள்! பங்குச்சந்தை முதலீட்டாளர்களே நோட் பண்ணுங்க..!

ஆனால் எக்சிட் போல் முடிவுகளின் படி என்டிஏ கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தால் பங்குச்சந்தையில் எந்த நிறுவனங்கள் அதிகப்படியான பலன் அடையும், இதேபோல் எக்சிட் போல் முடிவுகள் பொய்த்து போனால் எந்த நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் என்பதையும் பார்ப்போம்.

ரீடைல், உள்கட்டமைப்பு நிறுவனங்கள்:
ஆதித்யா விஷன், பீகாரின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் ரீடைல் செயின் நிறுவனமாகும். தேர்தல் பிறகு மக்களின் தங்கள் வீட்டுக்கு தேவையான மற்றும் விருப்பமான பொருட்களை அதிகளவில் வாங்குவார்கள், இதேபோல் இந்நிறுவனம் பீகாரில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு வருகிறது. இதனால் இந்த தேர்தலுக்கு மத்தியில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.

ரெஃபெக்ஸ் இன்டஸ்ட்ரீஸ், refrigerant பொருள்களின் விநியோகத்தில் பீகாரில் பெரும் பகுதி வர்த்தகத்தை கொண்டுள்ளது.

எஸ்.ஐ.எஸ், பாட்னாவில் தலைமையகம் கொண்ட பாதுகாப்பு மற்றும் பெசிலிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனம், அரசு ஒப்பந்தங்களை பெற வாய்ப்புள்ளதால் புதிய ஆட்சியில் பலன் பெறும் என என்டிடிவி தனது செய்தியில் குறிப்பிட்டு உள்ளது.

சுகாதாரம், ரியல் எஸ்டேட் துறை:
Jeena Sikho Lifecare, பீகாரில் ஒரு மருத்துவமனை மற்றும் 10 கிளினிக்குகளை இயக்கி, குறைவான செலவில் சுகாதாரம் மற்றும் லைப்ஸ்டேல் சேவைகளை வழங்கி வருகிறது.

அஷியானா ஹவுசிங், வீட்டு மற்றும் வணிக திட்டங்களுடன், அம்மாநில நகர்ப்புற வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த தேர்தல் மூலம் அமையும் ஆட்சி உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தினால் இந்நிறுவன பலன் பெறும்.

வி2 ரீடைல், 27 கடைகளுடன் பீகாரின் நுக்ரோவர் செயினில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் டவுன் பகுதியில் முக்கிய நுகர்வு முனையாக உள்ளது.

ஹிந்துஸ்தான் மீடியா வென்ச்சர்ஸ், பீகாரின் முன்னணி செய்தித்தாள் நிறுவனமாக உள்ளது.

இதை தாண்டி தற்போது பீகாரில் செயல்படுத்து வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் பலன் பெறும் நிறுவனங்கள் பட்டியலில் ரெயில்டெல், குளோபஸ் ஸ்பிரிட்ஸ், வருன் பெவரேஜஸ், ஜி.ஆர். இன்ஃப்ராப்ராஜெக்ட்ஸ், எல்&டி, பி.என்.சி. இன்ஃப்ராடெக், என்சிசி, அசோகா பில்ட்கான் ஆகியவை உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+