பங்குச்சந்தையில் சலசலப்பு.. பீகார் தேர்தல் முடிவுகளின் எதிரொலி எப்படி இருக்கும்..?!

பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்றைய நாளில் பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பதில் முதலீட்டாளர்களுக்கு பெரும் குழப்பமும் அச்சமும் இருந்து வருகிறது. பீகாரின் 38 மாவட்டங்களில் 243 தொகுதிகளில் நடந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், ஆரம்ப போக்குகள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 125 தொகுதிகளில் முன்னிலை பெறுவதாகக் காட்டுகின்றன. எதிர்க்கட்சி மகாகூட்டணி (இந்தியா பிளாக்) 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பீகார் தேர்தல், 2029 பொது தேர்தலுக்கு முன்னோடியாகக் கருதப்படுவதால், இது மத்திய அரசின் கொள்கை நிலைப்பாட்டை பாதிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.

பங்குச்சந்தையில் சலசலப்பு.. பீகார் தேர்தல் முடிவுகளின் எதிரொலி எப்படி இருக்கும்..?!

கிஃப்ட் நிஃப்டி சரிவு
பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன், காலை 7:37 மணிக்கு கிஃப்ட் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 25,845.5 புள்ளிகளில் வர்த்தகமானது, இது நிஃப்டி 50 குறியீடு வியாழன்கிழமை முடிவான 25,879.15 புள்ளிகளை விட குறைவான அளவில் திறக்கும் எனக் குறிக்கிறது.

நிஃப்டியும் சென்செக்ஸ் குறியீடுகள் கடந்த மூன்று நாளில் 1.5 சதவீதம் உயர்ந்த வியாழன்கிழமை மந்தமான உயரவை பதிவு செய்து முடிந்தன. இந்த நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலியாக வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

முதலீட்டு சந்தை வல்லுனர்களும் பீகார் தேர்தல் முடிவுகளால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளார். மேலும் எக்சிட் போல் முடிவுகளை பார்க்கும்போது என்டிஏ கூட்டணி பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டு உள்ளதால், இது பொருளாதார கொள்கையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் நாட்டின் வளர்ச்சி தொடரும் என நம்பிக்கையை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.

எக்சிட் போல் முடிவுகளில் என்டிஏ 133 முதல் 159 தொகுதிகளை வெல்லும் எனக் கூறப்பட்டது, அதேசமயம் இந்தியா பிளாக் 75 முதல் 101 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த போக்குகள் அப்படியே வாக்கு எண்ணிக்கையில் எதிரொலித்தால் பங்குச்சந்தையில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இருக்காது.

ஆனால் எக்சிட் போல் கணிப்புகள் பொய்த்து போனாலோ, என்டிஏ கூட்டணி போதுமான இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றவில்லை எனில் பங்குச்சந்தையில் குறுகிய கால சலசலப்பை ஏற்படுத்தலாம், ஆனால் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது. மேலும் மத்தியில் ஆட்சி மாற்றம் அளவுக்கு, நிலைமை கைமீறினால் நிஃப்டி 50 குறியீடு 7 சதவீதம் வரையில் குறைய வாய்ப்புள்ளது.

பீகாரிலும், மத்தியிலும் என்டிஏ ஆட்சியைத் தக்க வைத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும். தற்போதைய நிலைப்பாடு அனைத்தும் எக்சிட் போல் முடிவுகள் உண்மையாகுமா..? அல்லது பொய்யாகுமா..? என்பதில் தான் உள்ளது.

2024 தேசியத் தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சி, நிஃப்டி ஒரே நாளில் 6 சதவீதம் சரிந்தது போன்று, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின்பும் விற்பனை செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+