பிட்காயின் மதிப்பு மீண்டு உயர்வு.. கிரிப்டோ சந்தையில் நடப்பது என்ன தெரியுமா..?!

சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் அதிகப்படியான முதலீடுகள் கிரிப்டோ சந்தை பக்கம் திரும்பியுள்ளது.

இதனால் பிட்காயின் உட்படப் பல முக்கியக் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு உயர் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு மட்டும் 6.04 சதவீதம் அதிகரித்து 51,227.96 டாலராக உயர்ந்துள்ளது.

இதேபோல் டாப் 10 கிரிப்டோகரன்சியில் ரிப்பிள் தவிர அனைத்து கிரிப்டோவும் உயர்வுடன் உள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் கிரிப்டோ சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 1 சதவீதம் வரையில் சரிந்து 2.28 டிரில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.

 இந்திய முதலீட்டாளர்கள்

இந்திய முதலீட்டாளர்கள்

இந்தியாவில் கிரிப்டோ மற்றும் கிரிப்டோ முதலீட்டாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் ரீடைல் முதலீட்டாளர்கள் சிறிய மதிப்புகொண்ட கிரிப்டோவில் முதலீடு செய்துவிட்டு லாபத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

 ஆபத்தானது

ஆபத்தானது

இந்த ஐடியா எந்த அளவிற்கு லாபத்தைக் கொடுக்கும் என்பது தெரியவில்லை என்றாலும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் விலை குறைவாக இருக்கும் கிரிப்டோவில் முதலீடு செய்துவிட்டு லாபத்தைப் பெர ஆண்டவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

உலகில் 6000 கிரிப்டோகரன்சிகள் இருக்கும் வேளையில் இத்தகைய முதலீட்டுப் போக்கு மிகவும் ஆபத்தானது எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 

 கிறிஸ்மஸ்

கிறிஸ்மஸ்

இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் கிரிப்டோ முதலீட்டாளர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி Santa rally-க்காகக் காத்திருக்கின்றனர். அதாவது யாரேனும் பெரிய முதலீட்டாளர் கிரிப்டோ சந்தையில் அதிகப்படியான முதலீட்டைச் செய்வது அதிக லாபம் கிடைக்கப்போகிறது என்ற நினைப்பில் உள்ளனர். அமெரிக்கப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியிலும் இதே நிலைப்பாடு நிலவுகிறது.

 WazirX

WazirX

இந்தியாவில் முன்னணி கிரிப்டோ தளமாக விளங்கும் WazirX நிறுவனம் வாடியார் வம்சத்தின் குடும்ப உறுப்பினர்கள் உடன் இணைந்து மைசூரின் வளமான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறவியல் ஆகியவற்றைப் படைசாற்றும் வகையில் புதிதாக ஒரு NFT-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

 காயின்ஸ்விச் குபிர்

காயின்ஸ்விச் குபிர்

இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி நிறுவனமான காயின்ஸ்விச் குபீர் தனது இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக MANA, SAND, GALA, REQ, மற்றும் COTI ஆகிய 5 புதிய கிரிப்டோகரன்சியை முதலீடு செய்வதற்காக இணைத்துள்ளது. இதன் மூலம் ரீடைல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.

 டாப் கிரிப்டோகரன்சி மதிப்பு

டாப் கிரிப்டோகரன்சி மதிப்பு

  • Bitcoin : BTC - 51,261.74 டாலர் - 5.93 சதவீத வளர்ச்சி
  • Ethereum : ETH - 4,112.31 டாலர் - 4.52 சதவீத வளர்ச்சி
  • Binance Coin : BNB - 549.49 டாலர் - 4.23 சதவீத வளர்ச்சி
  • Tether : USDT - 1.00 டாலர் - 0.00 சதவீத வளர்ச்சி
  • Solana : SOL - 191.48 டாலர் - 6.70 சதவீத வளர்ச்சி
  • Cardano : ADA - 1.45 டாலர் - 8.20 சதவீத வளர்ச்சி
  • XRP : XRP - 0.98 டாலர் - 0.97 சதவீத வளர்ச்சி
  • USD Coin : USDC - 1.00 டாலர் - 0.13 சதவீத வளர்ச்சி
  • Terra : LUNA - 99.92 டாலர் - 15.91 சதவீத வளர்ச்சி
  • Avalanche : AVAX - 123.20 டாலர் - 3.58 சதவீத வளர்ச்சி
  • Polkadot : DOT - 29.26 டாலர் - 7.27 சதவீத வளர்ச்சி
  • Dogecoin : DOGE - 0.18 டாலர் - 3.57 சதவீத வளர்ச்சி
  • SHIBA INU : SHIB - 0.00003841 டாலர் - 6.13 சதவீத வளர்ச்சி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+