கிரிப்டோ கரன்சியான பிட்காயினின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருந்தது. புதன்கிழமை அன்று சர்வதேச அளவில் ஒரு பிட்காயின் மதிப்பு 1,12,000 டாலர்கள் என்ற மதிப்பை எட்டியது. சில வாரங்களுக்கு முன்னர் தான் பிட்காயின் மதிப்பு கடும் சரிவில் இருந்தது. ஆனால் அதில் இருந்து மீண்டு வந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது.
உச்சத்தை எட்டிய பிட்காயின் மதிப்பு: பிட்காயின் மதிப்பு 1, 12,000 டாலர்கள் (இந்திய ரூபாயில் 95 லட்சம்) என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருப்பது பிட்காயினில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டு தொடங்கியிலிருந்து தற்போது வரையிலான இந்த ஆறு மாத காலத்தில் மட்டும் பிட்காயின் பிட்காயின் மதிப்பு 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

ஈடிஎஃப் திட்டங்களால் நம்பிக்கை அதிகரிப்பு: அண்மை காலமாக பல்வேறு பெரிய முதலீட்டாளர்களும் முதலீட்டு நிறுவனங்களும் பிட்காயினில் அதிக முதலீட்டை செய்கின்றனர் . இது பிட்காயின் மதிப்பு உயர முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்க சந்தையில் பிட்காயின் ஈடிஎஃப் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு ஏராளமான மக்கள் இந்த ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். நேரடியாக பிட்காயின்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் கூட பிட்காயின் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இது பிட்காயின் மதிப்பையும் அதற்கான டிமாண்டையும் இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது.
டிரம்பின் நிலைப்பாடு: பிளாக்ராக் நிறுவனத்தின் பிட்காயின் ஈடிஎஃப் ஓராண்டு காலத்திலேயே 40 பில்லியன் டாலர்கள் என்ற மதிப்பை எட்டி இருக்கிறது. அமெரிக்காவின் பிட்காயின் ஈடிஎஃப் திட்டங்களில் மட்டும் கடந்த ஜூன் மாதத்தில் 1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றன என டெல்டா எக்ஸ்சேஞ்ச் நிறுவன தரவு தெரிவிக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ நாணயங்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை கொண்டவர் என்பதால் சர்வதேச அளவில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.
தொடர்ந்து உயரும் பிட்காயின்: கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற உடனே பிட்காயினின் மதிப்பு உயர தொடங்கியது. ஜனவரி மாதம் டிரம்ப் அதிபர் பதவி ஏற்ற போதும் கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு உயர்ந்தது. பின்னர் சரிவடைந்த பிட்காயினின் மதிப்பு தற்போது உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் தான் டிரம்ப் அமெரிக்க கருவூல கையிருப்பில் பிட்காயின்களையும் சேமித்து வைப்பதற்கான ஒரு ஆணையை பிறப்பித்தார். இதனை அடுத்து தான் பிட்காயின் மதிப்பு படிப்படியாக உயரத் தொடங்கியது.
தங்கத்துக்கு மாற்றா?: காயின்பேஸ் எனப்படும் மிகப்பெரிய கிரிப்டோ எக்சேஞ்ச் நிறுவனம் அண்மையில் தான் அமெரிக்கா பங்குச்சந்தையான எஸ் & பி 500 குறியீட்டில் சேர்க்கப்பட்டது. கிரிப்டோ கரன்சிகளுக்கான ஈடிஎஃப் திட்டங்கள், அமெரிக்க அரசின் கிரிப்டோ கரன்சி நிலைபாடு, தங்கத்துக்கு மாற்றாக பாதுகாப்பான முதலீடாக பலரும் பிட்காயின்களை கருதுவது உலக அளவில் அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்க காரணமாகியுள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications