கடந்த 2ம் தேதியன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா உள்பட சுமார் 150 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது. இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிப்பதற்கான சா்த்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததால் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இன்று பலத்த அடிவாங்கியது. இந்திய பங்குச் சந்தைளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் பலத்த சரிவுடன் தொடங்கியது. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 3,900 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்தது. வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் சரிந்து 73,137.90 புள்ளிகளில் நிலை கொண்டது.
இந்திய பங்குச் சந்தைகள் இதற்கு முன்பும் பல ஆண்டுகளில் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தை உருவாகாத காலத்துக்கு முன்பே பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது. ஒவ்வொரு சரிவின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்த வகையில் பங்குச் சந்தை வரலாற்றில் மோசமாக அமைந்த ஆண்டுகளை பார்ப்போம்.

2024 வீழ்ச்சி
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் சென்செக்ஸ் 10,000 புள்ளிகள் அல்லது 11.79 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதே காலத்தில் நிஃப்டி 12.38 சதவீதம் சரிந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தபிறகு கடந்த ஜூன் 3-4 தேதிகளில் நிஃப்டி 1,380 புள்ளிகள் அல்லது 5.93 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
2020 சரிவு
கோவிட்-19 காரணமாக பிப்ரவரி 28ம் தேதியன்று சென்செக்ஸ்1,448 புள்ளிகள் சரிந்தது, பின்பு உலக பதற்றம் காரணமாக மார்ச் 4 மற்றும் 6ம் தேதிகளில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது. மார்ச் 16ம் தேதியன்று சென்செக்ஸ் 2,713.41 புள்ளிகள் வீழ்ந்தது. இருப்பினும் மார்ச் 23ம் தேதியன்று சென்செக்ஸ் தனது மிகவும் மோசமான ஒரு நாள் வீழ்ச்சியை பதிவு செய்தது. லாக்டவுன் மந்தநிலை குறித்த அச்சத்தை தூண்டியதால் அன்றைய தினம் சென்செக்ஸ் 3,934.72 புள்ளிகள் (13.15 சதவீதம்) சரிந்தது, நிஃப்டி 1,135 புள்ளிகள் (12.98 சதவீதம்) வீழ்ந்தது.
2015 வீழ்ச்சி
அந்த ஆகஸ்ட் 24ம் தேதியன்று சென்செக்ஸ் 1,624 புள்ளிகளும், நிஃப்டி 490 புள்ளிகளும் தடாலடியாக குறைந்தது. சீனாவின் பொருளாதாரம் மந்தமாகும் என்ற பயம், யுவான் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் அன்று ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு கண்டது.
2008 கோரதாண்டவம்
லெஹ்மன் பிரதர்ஸ் நெருக்கடிக்கு பிறகு ஏற்பட்ட மந்தநிலை காரணமாக உலகளவில் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்த தருணங்களில் இந்த ஆண்டு ஒன்றாகும். அந்த ஆண்டு ஜூன் 21ம் தேதியன்று சென்செக்ஸ் 1,408 புள்ளிகள் குறைந்து 17,605ஆக இருந்தது. அன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணிநிறுத்தம் செய்யப்பட்டது. அன்றைய தினம் கருப்பு திங்கள் என்றும் அழைக்கப்பட்டது. ஜனவரி 22ம் தேதியும் பிஎஸ்இயில் வர்த்தகம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. ஏனெனில் சென்செக்ஸ் அதன் சர்க்கியூட் வரம்பை எட்டியதால் நிறுத்தப்பட்டது.
2007 வீழ்ச்சி
மந்தநிலை தொடங்கியதால் 2007ம் ஆண்டு பங்குச் சந்தை ஒரு ரோலர் கோஸ்டர் சவாரியாக இருந்தது. அந்த ஆண்டு சென்செக்ஸ் மற்றும் நிப்டி 5 பெரிய சரிவுகளை சந்தித்தது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்ததால் ஏப்ரல் 2ம் தேதியன்று சென்செக்ஸ் 617 புள்ளிகள் சரிந்தது. ஆகஸ்ட் 1 மற்றும் 16ம் தேதிகளில் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. அக்டோபர் 18ம் தேதி சென்செக்ஸ் 1,428 புள்ளிகளும், நிஃப்டி 208 புள்ளிகளும் வீழ்ந்தது. அடுத்ததாக நவம்பர் 21 மற்றும் டிசம்பர் 17ம் தேதிகளில் பங்குச் சந்தைகள் கணிசமான சரிவை பதிவு செய்தன.
2004 சரிவு
2004 மே 17ம் தேதியன்று சென்செக்ஸ் 15.52 சதவீதம் சரிந்தது. இது அதன் வரலாற்றில் மிகப்பெரிய சரிவாக அமைந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் எதிர்பாராத தோல்விக்கு பிறகு இந்த சரிவு ஏற்பட்டது.
1992 வீழ்ச்சி
ஹர்ஷத் மேத்தா மோசடியால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்ததையடுத்து, அந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதியன்று சென்செக்ஸ் 12.77 சதவீதம் சரிந்தது. சந்தை சூழ்ச்சி மூலம் அந்த ஆண்டில் ரூ.30.000 கோடி மதிப்புள்ள பத்திர மோசடியில் மேத்தா ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர் ஒரு மோசடி செய்பவராக அறிவிக்கப்பட்டார்.
1991 சரிவு
ஹர்ஷத மேத்தா மற்றும் கேதன் பரேக் போன்ற பெரிய மனிதர்களால் செய்யப்பட்டதாக கூறப்படும் மோசடிகள் மற்றும் சர்வதேச நிலவரங்கள் காரணமாக அந்த ஆண்டு சென்செக்ஸ் மற்றும நிப்டி இரண்டும் ஏற்ற இறக்கங்களை சந்தித்தன.
1982 வீழ்ச்சி
இந்த ஆண்டில் வங்காளத்தை சேர்ந்த ஒரு குழுமம், அதிகளவில் பங்குகளை குறிப்பாக ரிலையன்ஸ் பங்குகளை விற்பனை செய்ததால், பிஎஸ்இ தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்பட வேண்டியிருந்தது. விக்கிபீடியாவின் படி, சுமார் 1.10 லட்சம் பங்குகள் குறுகிய காலத்தில் விற்பனை செய்யப்பட்டது
1865 சரிவு
இந்திய சந்தை 1865ம் ஆண்டில் முதல் சரிவை சந்தித்தது. அப்போது மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) உருவாக்கப்படாத போதும், அந்த நேரத்தில் குஜராத்திகளும், பார்சிகளும் ராம்போர்ட் ரோ மற்றும் மெடோஸ் தெரு சந்திப்பில் பங்குகளை வர்த்தகம் செய்ததாக அறியப்பட்டது. விக்கிபீடியாவின் அறிக்கையின்படி, முந்தைய ஆண்டுகளில் அமெரிக்க உள்நாட்டு போரின் முடிவுகள் குறித்த ஊகங்கள், புதிய இந்திய நிறுவனங்களின் பங்குகளில் பகுத்தறிவற்ற அதிகரிப்புக்கு வழிவகுத்தன.
உதாரணமாக, ரூ.5,000 முகமதிப்பு கொண்ட பேக் பே ரெக்லமேஷனின் பங்கு விலை ரூ.50,000ஐ எட்டியது. ரூ.5,00,00,000 முகமதிப்பு கொண்ட கனரா வங்கியின் பங்கு விலை ரூ.2,90,00,050ஆக சரிந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications