இந்திய பங்குச்சந்தையில் மூன்று முக்கிய நிறுவனக்கள் IPO வெளியிட்டு வாரத்தின் முதல் நாள், செப்டம்பர் மாதத்தின் முதல் நாளில் பட்டியலிடப்பட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்றைய வர்த்தக சூழ்நிலையில் 100-க்கு 80 நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாக இருப்பது ஐபிஓ தான்.
இந்தியாவில் பெரும் பகுதி மக்கள் பங்குச்சந்தை முதலீட்டில் நுழைந்துள்ளனர். இதேபோல் மக்கள் ஆரம்பக்கட்டத்தில் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வது மூலம் கிடைக்கும் பலன்களை நன்கு உணர்ந்த நிலையில் சரியான இலக்கு, வர்த்தகம், நிர்வாகத்தை கொண்டு இருக்கும் நிறுவனத்தின் ஐபிஓ-வில் மக்கள் மிகவும் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனர்.

பொதுவாக ஐபிஓ வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகம் சார்ந்த நடக்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலை தற்போது மாறியுள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் புதிய பலத்தை பெற்றுள்ள வேளையில் கார்ப்ரேட் நிறுவனங்கள் புதிய முதலீட்டுக்காக ஐபிஓ-வை அதிகம் சார்ந்துள்ளது. இதனால் இனி வரும் காலத்தில் சிறிதும், பெரிதுமாக பல ஐபிஓ-க்கள் வரும் என சந்தை நிபுணர்கள் நம்புகின்றனர்.
சிவாஷ்ரித் ஃபுட்ஸ் IPO:
இன்று சிவாஷ்ரித் ஃபுட்ஸ், அனந்திதா மெடிகேர் மற்றும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் (இந்தியா) ஆகிய நிறுவனங்களின் ஐபிஓ வெற்றிகரமான முடிந்து இன்று, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகத்திற்கு வந்துள்ளது. இந்த IPOக்களின் வெற்றி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய நிதி திரட்டல் வாய்ப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது, இதேவேளையில் இந்த நிறுவனங்கள் முதல் நாள் செயல்பாடும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
அனந்திதா மெடிகேர் IPO:
அனந்திதா மெடிகேர் நிறுவனத்தின் பங்குகள், திங்கட்கிழமை NSE SME தளத்தில் ஐபிஓ ஆரம்ப விலை ரூ.145-க்கு மேல் 90 சதவீதம் உயர்ந்து ரூ.275.50-ல் பட்டியலிடப்பட்டன. இது சந்தை எதிர்பார்ப்புகளை மீறியது, ஏனெனில் IPOக்கு முந்தைய கிரே மார்க்கெட் பிரீமியம் (GMP) ரூ.89-ஆக இருந்து, பட்டியலிடல் விலை ரூ.234-ஆக எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 61 சதவீதம் உயர்வுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மூன்று நாள் ஐபிஓ சப்ஸ்கிரிப்ஷன் காலத்தில் அனந்திதா மெடிகேர் பங்குகளுக்கு 300.89 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் பெற்று முதலீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி, மருத்துவ துறையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.
சிவாஷ்ரித் ஃபுட்ஸ் IPO:
சிவாஷ்ரித் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் NSE SME-யில் ரூ.142 என்ற வெளியீடு விலையை விட 4.6 சதவீதம் உயர்ந்து ரூ.148.50-ல் பட்டியலிடப்பட்டன. ஆனால், பின்னர் பங்கு விலை லோவர் சர்கியூட் வரம்பை எட்டியது.
ரூ.70.03 கோடி மதிப்பிலான இந்த IPO, ஆகஸ்ட் 22 முதல் 26 வரை சப்ஸ்கிரிப்ஷனுக்காக திறக்கப்பட்டது, இதில் ரூ.61.29 கோடி மதிப்புள்ள 43 லட்சம் பங்குகள் புதிய வெளியீடு மற்றும் ரூ.8.75 கோடி மதிப்புள்ள 6 லட்சம் பங்குகள் OFS வாயிலாகவும் விற்கப்பட்டது. மொத்தம் 2.89 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் பெற்ற இந்த IPO, உணவு துறையில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை காட்டுகிறது.
கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் (இந்தியா) IPO
கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் (இந்தியா) நிறுவனத்தின் பங்குகள் திங்கட்கிழமை NSE SME-யில் ரூ.87 என்ற IPO விலையை விட 14.94 சதவீதம் உயர்ந்து ரூ.100-ல் பட்டியலிடப்பட்டன, இது வலுவான துவக்கமாக பார்க்கப்படுகிறது. ரூ.41.51 கோடி மதிப்புள்ள இந்த SME IPO, ஆகஸ்ட் 22 முதல் 26 வரை திறக்கப்பட்டு முதலீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
மூன்று ஐபிஓ சர்ஸ்கிரிப்ஷன் காலத்தில் 31.47 லட்சம் பங்குகளுக்கு எதிராக 56.63 கோடி பங்குகளுக்கு முதலீட்டு கோரிக்கை பெறப்பட்டு, 179.97 மடங்கு சந்தா பெறப்பட்டது.
பங்குச்சந்தை நிலை மற்றும் எதிர்பார்ப்புகள்
இந்த மூன்று IPOக்களின் வெற்றிகரமான பட்டியலிடல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முதலீட்டு சந்தையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அனந்திதா மெடிகேர் தனது 90 சதவீதம் பிரீமியத்துடன் சிறப்பான செயல்பாட்டை காட்டியுள்ளது, அதே நேரம் சிவாஷ்ரித் மற்றும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸும் நல்ல ஆரம்பத்தை பதிவு செய்துள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications