ரத்தக்களரியான சென்செக்ஸ்.. நடுங்க வைக்கும் 4 முக்கிய காரணங்கள்..!

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்தது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கித் துறை பங்குகள் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இரண்டும் பெரும் இழப்புகளை சந்தித்தன.

புதிய நிதியாண்டின் முதல் வர்த்தக நாளே படுமோசமான நிலையில் துவங்கி, முதலீட்டாளர்களை கண்ணீர் விட வைத்துள்ளது. ஒருப்பக்கம் இந்திய பங்குச்சந்தை மீது அதிகப்படியான நம்பிக்கை உள்ளது என சந்தை நிபுணர்கள் தொடர்ந்து கூறி வந்தாலும், 4 முக்கிய காரணத்தால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையை விட்டு தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.

ரத்தக்களரியான சென்செக்ஸ்.. நடுங்க வைக்கும் 4 முக்கிய காரணங்கள்..!

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து அதிகப்படியாக 75,912.18 புள்ளிகளுக்கு இறங்கி இன்றைய வர்த்தகத்தை முடித்துள்ளது. அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 குறியீடும் 23,136 புள்ளிகள் என்ற மோசமான நிலையை இன்று எட்டியது.

இந்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1390.41 புள்ளிகள் சரிந்து 76,024.51 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 353.65 புள்ளிகள் குறைந்து 23,165.70 புள்ளிகளை எட்டியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் வாகனத் துறையைத் தவிர, அனைத்து முக்கிய தொழில்துறை பிரிவுகளும் இழப்புகளை சந்தித்தன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் மற்றும் நுகர்வோர் நீடித்த பொருட்கள் துறைகள் ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை சரிவை பதிவு செய்தன.

இதன் விளைவாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வரையிலான இழப்பை எதிர்கொண்டது. இன்றைய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு 4 முக்கிய காரணிகள் முக்கியமான காரணமாக உள்ளது.

முதலாவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் நாளை அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி திட்டமிட்டப்படி ரெசிப்ரோக்கல் வரி விதிக்க உள்ளதால் உலகளாவிய சந்தைகள் அதிக பதட்டத்தை வெளிப்படுத்தின. இதன் விளைவாகவே இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் பெரும்பாலான அன்னிய முதலீடுகள் அனைத்தும் அமெரிக்க சந்தைக்கு படையெடுத்துள்ளது.

ஏப்ரல் 2ஆம் தேதிய டிரம்ப் "விடுதலை நாள்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அமெரிக்க அரசு எவ்விதமான பாரபட்சமின்றி அனைத்து நாடுகள் மீதும் விரிவான ரெசிப்ரோக்கல் வரிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகளாவிய வர்த்தகப் போர் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது, மேலும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் நிலை உள்ளது.

இரண்டாவதாக, அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியிருக்கும் தகவல் தொழில்நுட்ப பங்குகள், ஐடி சேவைக்கான குறைந்த தேவை மற்றம் ஏஐ ஆதிக்கம் ஆகியவற்றால் பெறும் சரிவை எதிர்கொண்டுள்ளது. ஐடி துறை பங்குகள் ஏற்கனவே மார்ச் காலாண்டில் 15% சரிவை சந்தித்துள்ளது. இது நிஃப்டி 50 குறியீட்டின் ஒட்டுமொத்த சரிவுக்கு கணிசமாக பங்களித்தது.

மூன்றாவதாக, கச்சா எண்ணெய் விலைகள் ஐந்து வார உயர்வை நெருங்கியுள்ளது இந்தியா போன்ற பல நாடுகளை பயமுறுத்தியுள்ளது. இதன் காரணமாகவும் பணவீக்க பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு சுமார் 74.67 டாலராகவும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 71.37 டாலராகவும் வர்த்தகமானது.

ஏற்கனவே அதிகப்படியான இறக்குமதி மூலம் இந்தியாவின் நிதி பற்றாக்குறை அளவீடுகள் மோசமாக இருக்கும் வேளையில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் என அனைத்தும் உயரும், இது நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.

இறுதியாக, முந்தைய எட்டு வர்த்தக அமர்வுகளில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் கிட்டத்தட்ட 5.4% அதிகரித்ததால், முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆனால் இதை எளிதாக எடுத்துக்கொள்ளவும் முடியாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+