இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஐபிஓக்களில் முதலீடு செய்வதற்கு ஏற்ற வகையில் 3 முக்கிய நிறுவனங்களின் ஐபிஓக்கள் வெளியாக உள்ளன. குறிப்பாக போட் நிறுவனத்தின் ஐபிஓ சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமேஜின் மார்க்கெட்டிங் லிமிடெட் (boAt), ஆல்கெம் லைஃப் சயின்ஸ், மற்றும் ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்கிளிங் ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்கள் ஐபிஓ வெளியிடுவதற்கு இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) இருந்து இறுதி அனுமதியைப் பெற்றுள்ளன.

போட் ஐபிஓ: ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களுக்குப் புகழ்பெற்ற boAt நிறுவனம், ஏப்ரல் மாதம் தனது IPO விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. இந்த நிறுவனம் ரூ. 13,000 கோடி மதிப்பீட்டை இலக்காக கொண்டு ஐபிஓ வெளியிட இருக்கிறது. இது boAt நிறுவனத்தின் இரண்டாவது ஐபிஓ முயற்சி ஆகும். இதற்கு முன்னர், 2022 ஜனவரியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள ஐபிஓ வரைவு ஆவணங்களைச் சமர்ப்பித்தது. தற்போது அதனை மாற்றி மீண்டும் ஒரு முறை ஆவணம் செய்து செபியின் அனுமதியை பெற்றுள்ளது.
அமன் குப்தா மற்றும் சமீர் மேத்தா ஆகியோரால் 2013இல் நிறுவப்பட்ட இமேஜின் மார்க்கெட்டிங் என்பது தான் போட் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும். ஆடியோ உபகரணங்கள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் , தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் மற்றும் மொபைல் துணை கருவிகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை இந்நிறுவனம் வழங்குகிறது.
ஆல்கெம் லைஃப் சயின்ஸ்: ஜெனரிக் மருந்துகளுக்கான பங்கு ரூ.10 என்ற முக மதிப்புடன் கூடிய ரூ.190 கோடி மதிப்புள்ள புதிய பங்கு வெளியீட்டையும், அதே முக மதிப்புடைய 7,155,000 ஈக்விட்டி பங்குகள் விற்பனைக்கான சலுகை (OFS) முறையிலும் வெளியிடப்பட உள்ளன. இந்த ஐபிஓ வெளியீட்டிற்கான புக்கிங் மேனேஜராக எம்க்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் செயல்படுகிறது.
ஜெயின் ரிசோர்ஸ்: ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்கிளிங் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டின் மொத்த மதிப்பு ரூ.2,000 கோடி ஆகும். இதில் ரூ.500 கோடி மதிப்புள்ள புதிய பங்கு வெளியீடும், ரூ.1,500 கோடி வரையிலான விற்பனைக்கான சலுகையும் (OFS) அடங்கும். ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்கிளிங், இந்த நிதியை நிறுவனத்தின் தற்போதுள்ள சில கடன்களை முன்கூட்டியே செலுத்துவதற்கும், பொதுக் கார்ப்பரேட் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம், இரும்பு அல்லாத உலோக குப்பைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் இரும்பு அல்லாத உலோகப் பொருட்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications