மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் EaseMyTrip.com நிறுவனத்தில் 27 லட்சம் பங்குகளை வாங்கி இருக்கிறார். பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் திரை துறையை தாண்டி பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்வதிலும் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
அந்த வகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் EaseMyTrip.com நிறுவனத்தில் 27.4 லட்சம் பங்குகளை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். இதன் மூலம் இந்த நிறுவனத்தில் இவர் 0.07 சதவீத பங்குகளை தனக்கு சொந்தமானதாக மாற்றியுள்ளார். அண்மையில் தான் EaseMyTrip.com நிறுவனத்தின் வாரிய குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் 12.84 கோடி பங்குகளை ஒரு பங்கின் விலை 18.22 ரூபாய் என்ற விலையில் மொத்தம் 234 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வது என முடிவெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாகத்தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ் 27.44 லட்சம் பங்குகளை வாங்கி இருக்கிறார்.
அண்மையில் தான் இவர் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக தோன்றினார். ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் பயணங்களில் ஆர்வம் கொண்டவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பதால் அவர் EaseMyTrip.com நிறுவனத்தின் பங்குதாரராகவும் விளம்பர தூதராகவும் மாறி இருப்பது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என இதன் துணை நிறுவனரான ரெகார்ட் பிடியே தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இந்த நிறுவனம் பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதாவது ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் என்ற வகையில் நவம்பர் 29ஆம் தேதியை ரெக்கார்ட் தேதியாக கொண்டு போனஸ் அறிவிக்கப்பட்டது. EaseMyTrip.com இதுவரை மூன்று முறை தங்கள் பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்கி இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் இரண்டு முறையும் நடப்பு ஆண்டில் ஒரு முறையும் என போனஸ் பங்குகளை வழங்கியுள்ளது.

இந்த நிறுவனத்தின் 2025 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் 45 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருமானம் 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. அண்மையில் தான் இந்நிறுவனம் Home Health Care Center, Jeewani Hospitality, Planet Education Australia ஆகிய மூன்று நிறுவனங்களிடம் பெரிய அளவிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்த நிறுவனங்களில் 49 சதவீத பங்குகளை சொந்தமாக வாங்கியது.
டிசம்பர் 11ஆம் தேதி இதன் ஒரு பங்கு மதிப்பு 16.97 ரூபாய் என வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு 7.54 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications