மும்பை: SME பிரிவை சேர்ந்த ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு ஒரே ஆண்டிலேயே 4800 சதவீதம் லாபத்தை பெற்று தந்துள்ளது. போண்டாடா இன்ஜினியரிங் (Bondada Engineering)என்ற நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு கடந்த ஓராண்டு காலத்தில் அவர்கள் எதிர்பாராத அளவிலான லாபத்தை ஈட்டி தந்துள்ளது.
கடந்தாண்டு இந்த நிறுவனத்தில் 1.2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கெல்லாம் தற்போது அதன் மதிப்பு 59 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. போண்டாடா இன்ஜினியரிங் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐபிஓ வெளியீடு செய்தது.

ஒரு பங்கின் விலை 75 ரூபாய் என்று அளவில் மொத்தம் 1600 பங்குகள் கொண்ட ஒரு லாட்டினை 1.2 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்தது. இதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
இந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு இதன் ஐபிஓ விலையை விட பல மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தில் 1.2 லட்சம் ரூபாய் செலுத்தி ஐபிஓ-வில் முதலீடு செய்தவர்களுக்கெல்லாம் தற்போது அவர்களின் பணத்தின் மதிப்பு 58.95 லட்சம் ரூபாய் என உயர்ந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை மட்டும் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 800 சதவீதம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து நாள்தோறும் 5 சதவீதம் என உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலையை எட்டி வருகிறது.
ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 3,769 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் சுமார் 8000 கோடி என்ற நிலையில் இருக்கிறது. 2024ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 804 கோடி, அதில் லாபம் 46 கோடி ரூபாய். இந்த நிறுவன பங்குகளில் 63 சதவீதம் புரமோட்டோர்களிடமும், 36 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் இருக்கிறது.
அண்மையில் கூட இந்த நிறுவனம் லூமினா கிளீன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 575 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை பெற்றுள்ளது. மின் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான இந்த திட்டப்பணிகள் மூலம் தங்கள் நிறுவனம் மேலும் வளர்ச்சி அடையும் என்று போண்டாடா இன்ஜினியரிங் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போண்டாடா இன்ஜினியரிங் நிறுவனம் கன்ஸ்ட்ரக்ஷன் பிரிவில் செயல்படக்கூடிய ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பிரதானமாக டெலிகாம் மற்றும் சோலார் எனர்ஜி துறைகளில் செயல்பட்டு வருகிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?



Click it and Unblock the Notifications