மும்பை பங்குச்சந்தையை பதம் பார்த்த கச்சா எண்ணெய் விலை உயர்வு.. ஒரு பேரல் 108 டாலர்!

அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் தாக்குதல் தான் தற்போது பதற்றம் செங்கடலுக்கு சென்றுள்ளது, ஈரான் ஆதாரவு கொண்ட ஹவுதி படைகள் சவுதி அரேபியா மீது பெரும் தாக்குதல் நடத்திய பின்பு தற்போது யெமன் நாட்டின் மோச்சா துறைமுகத்தை மொத்தமாக கைப்பற்றி தனது தட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மூலம் செங்கடல் வழியாக வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் விளையாக இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு சுமார் 2 சதவீதம் வரையில் உயர்ந்து 108.68 டாலர் வரையில் உயர்ந்து 110 டாலர் அளவீட்டை நெருங்க துவங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தையை பதம் பார்த்த கச்சா எண்ணெய் விலை உயர்வு.. ஒரு பேரல் 108 டாலர்!

இதன் செயின் ரியாக்ஷனாக இந்திய பங்குச்சந்தையில் விமான சேவை நிறுவனங்களில் துவங்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், பெயிண்ட் உற்பத்தி நிறுவனங்கள், டயர் தயாரிப்பு நிறுவனங்கள் என கச்சா எண்ணெய், எரிபொருள், பெட்ரோகெமிக்கல் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வெளியேற்றி வரும் வேளையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் அச்சம் உருவாகியுள்ளது, ஏற்கனவே ரூபாய் மதிப்பு தடுமாற்றம் அதிகரித்து வரும் வேளையில் இந்திய சந்தையில் இருந்து பங்குகளை விற்பனை செய்து பாதுகாப்பாக பத்திர சந்தையில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

இதனால் இந்த வருடம் மட்டும் சுமார் 2.8 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பனை செய்து வெளியேற்றியுள்ளனர்.

இதற்கு ஏற்றார் போல் மும்பை பங்குச்சந்தை காலை முதல் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது, சென்செக்ஸ் குறியீடு நேற்றைய வர்த்தக முடிவில் 74,902.59 புள்ளிகளில் முடிவடைந்த நிலையில் இன்று 74,160 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.

வழக்கம் போல் இன்றும் வர்த்தகம் முடியும் கடைசி 2 மணிநேரத்தில் சந்தை சரிவில் இருந்து மீண்டு வர துவங்கியது இதனால் தற்போது வெறும் 54 புள்ளிகள் சரிந்து 74,835 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இண்டிகோ ஆகியவை 2-5 சதவீதம் வரையில் சரிந்த நிலையில் வர்த்தகம் முடியும் வேளையில் 1-2 சதவீத சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றத்தை உள்நாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக நிரப்பி வருகின்றனர்.

மேலும் நெரோலாக் பெயிண்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் 1-2 சதவீதம் வரையிலான சரிவை காலை வர்த்தகத்தில் பதிவு செய்தது. இதோடு அப்பல்லோ டயர்ஸ், ஜேகே டயர்ஸ், சியாட் டயர்ஸ் ஆகியலை 1 2 சதவீதம் வரையிலான சரிவை பதிவு செய்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+