10:1 stock split: கடன் இல்லாத நிறுவனம்.. ஒரே ஆண்டில் 300% உயர்ந்த பங்கு விலை..!

பிரிட்ஜ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் ஒரு முதலீட்டு ஆலோசனை நிறுவனம். இந்நிறுவனம் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிதி மற்றும் முதலீட்டு ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.

மேலும், செக்யூரிட்டீஸ் தரகு, செக்யூரிட்டீஸ் வர்த்தகம், முதலீட்டு மேலாண்மை மற்றும் நிதி ஆலோசனை சேவைகள் போன்றவற்றை வழங்குகிறது. 2024 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.8.60 கோடியாக இருந்தது. இன்று இது ரூ.9.17 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் ஒரு கடன் இல்லாத நிறுவனமாகும். இது இந்நிறுவனத்துக்கு பெரிய ப்ளஸ் பாயிண்டாக உள்ளது.

10:1 stock split: கடன் இல்லாத நிறுவனம்.. ஒரே ஆண்டில் 300% உயர்ந்த பங்கு விலை..!

பிரிட்ஜ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 10:1 என்ற விகிதத்தில் பங்கினை பிரிப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட 10 பங்குகளாக பிரிக்கப்பட உள்ளது. இதற்கான பதிவு தேதி ஜூலை 10 என அறிவித்துள்ளது.

இந்த தகவல் வெளியானதையடுத்து நேற்று பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை 5 சதவீம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட் அடித்து ரூ.26.56ஐ எட்டியது. இன்றும் மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை அப்பர் சர்க்கியூட் அடித்து ரூ.27.27ஐ எட்டியது. இந்த ஏற்றம் நாளையும் தொடர்ந்தால் இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சவிலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலை 300 சதவீதம் உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பிரிட்ஜ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் பங்கு விலை ரூ.27.27ல் முடிவுற்றது. பிரிட்ஜ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனம் 2024 மார்ச் காலாண்டில் நிகர வருவாயாக ரூ.32 லட்சம் ஈட்டியுள்ளது. மேலும் நிகர லாபமாக ரூ.27 லட்சம் ஈட்டியுள்ளது.

அதேசமயம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர வருவாயாக ரூ.80 லட்சம் சம்பாதித்துள்ளது. மேலும் நிகர லாபமாக ரூ.52 லட்சம் ஈட்டியுள்ளது. முந்தைய 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.68 லட்சம் நிகர இழப்பு ஏற்பட்டு இருந்தது.

இந்நிறுவனத்துக்கு கடன் இல்லாதது ஒரு பாசிடிவ்வான விஷயம். அதேபோல் நிறுவனத்தின் பி/இ விகிதம் நிறுவனம் சார்ந்த துறையின் பி/இ விகிதத்தை காட்டிலும் குறைவாக இருப்பது மற்றொரு சாதகமான அம்சமாகும். தற்போது பிரிட்ஜ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பி/இ விகிதம் 17ஆக உள்ளது. அதேசமயம் இத்துறையின் பி/இ விகிதம் 33ஆக உள்ளது.

துறையின் பி/இ விகிதத்தை காட்டிலும் இந்நிறுவனத்தின் பி/இ விகிதம் குறைவாக உள்ளது. பொதுவாக பி/இ விகிதம் 25க்குக் கீழ் இருப்பது லாபகரமாகும். மேலும் இந்நிறுவனத்தின் பங்கு மூலதனம் மூலமான வருமானம் (ROE)75 சதவீதமாக உள்ளது. பொதுவாக இந்த விகிதம் 20 சதவீதத்துக்கு மேல் இருந்தால் சிறந்தது.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+