இந்திய பங்கு சந்தையில் 2023ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம் தந்து மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது. அந்த பங்கு என்ன? எவ்வளவு லாபம் தந்துள்ளது என்பன உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.
பிரைட் அவுட்டோர் மீடியா (Bright Outdoor Media Ltd) நிறுவனத்தின் ஐபிஓ மார்ச் 2023-ல் இந்திய பங்குச்சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது இதன் ஒரு பங்கு விலை 146 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஐபிஓ-வின் ஒரு லாட் அளவு 1,000 பங்குகளாக இருந்தது. அந்த சமயத்தில் ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 1,46,000 ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும்.

பிரைட் அவுட்டோர் மீடியா பங்கு, 2023இல் பட்டியலிடப்பட்டதிலிருந்து பங்குதாரர்களுக்கு மூன்று முறை இறுதி டிவிடெண்ட் வழங்கியுள்ளது. ஒவ்வொரு பங்குக்கும் 0.50 ரூபாய் வீதம் டிவிடெண்ட் வழங்கப்பட்டது. மேலும் இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 1:2 விகிதத்தில் போனஸ் பங்குகளை அறிவித்தது.
எனவே தொடக்கத்தில் ஐபிஓ மூலம் 1,000 பங்குகளை வாங்கிய ஒரு முதலீட்டாளர், நீண்ட காலமாக அந்த பங்குகளை விற்காமல் வைத்திருந்தார் என வைத்துக்கொள்வோம். 1:2 என்ற போனஸ் பங்கு அறிவிப்பிற்குப் பிறகு, அந்த முதலீட்டாளரிடம் இருந்த 1,000 பங்குகள் 1,500 பங்குகளாக உயர்ந்தன. தற்போது பிரைட் அவுட்டோர் மீடியா பங்கின் விலை 335 ரூபாய்.
எனவே 2023இல் முதலீடு செய்யப்பட்ட 1.46 லட்சம் ரூபாய் தற்போது 5,02,500 ரூபாய் மதிப்புடையதாக மாறியுள்ளது. இந்நிறுவனம் இரண்டாம் காலாண்டில் 71.85 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுளது,. இது முந்தைய காலாண்டை விட 13.49% வளர்ச்சியையும், முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 24.65% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் லாபம் 11.03 கோடி ரூபாயாகும். இது முந்தைய காலாண்டை விட விட 9.45% வளர்ச்சியையும், முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 20.64% வளர்ச்சியையும் எட்டியுள்ளது.
ஸ்மால் கேப் பிரிவை சேர்ந்த இந்த பங்கின் 52 வார கால உச்சபட்ச விலை 450 ரூபாய் ஆகும். இந்நிறுவனத்தில் 70% பங்குகள் பிரமோட்டர்கள் வசம் உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சுமார் 7% பங்குகளை வைத்துள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications
