பங்கு சந்தையானது சமீபத்திய நாட்களாக கடந்த சில தினங்களாகவே தடுமாறி வரும் நிலையில், உள்நாட்டு தரகு நிறுவனம் 4 பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது.
சுப்ரஜித் இன்ஜினியரிங், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஜுபிலண்ட் இங்க்ரீவியா மற்றும் ஓபராய் ரியாலிட்டி ஆகிய பங்குகளை பரிந்துரை செய்துள்ளது.
இந்த பங்குகள் 50% வரை ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதெல்லாம் சரி என்ன காரணம்? தற்போது சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில் இருக்கும் முதலீடுகளை வைத்திருக்கலாமா? வேண்டாமா? என யோசிக்கிறோம். அப்படியிருக்கும்பட்சத்தில் இந்த 4 பங்குகளை பரிந்துரைக்க என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம்.
என்ன ஆச்சு சன் டிவிக்கு.. பங்குச்சந்தையில் பெரும் நஷ்டம்..!

சுப்ரஜித் இன்ஜினியரிங்
ஏஞ்சல் நிறுவனத்தின் பரிந்துரையில் முதலாவதாக பார்க்கவிருப்பது சுப்ரஜித் இன்ஜினியரிங், OEM-களின் உற்பத்தியில் சுப்ரஜித் முக்கிய பயனாளி என நாங்கள் நம்புகிறோம். இதன் வலுவான வளர்ச்சி கண்ணோட்டமானது, இதன் வளர்ச்சி அதிகரிக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. சுப்ரஜித் முக்கியமான வாகன கேபிள் சப்ளையர்களில் ஒன்றாகும்.
இப்பங்கினை தான் தரகு நிறுவனம் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையாக 485 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய லெவலில் இருந்து 45% அதிகரிக்கலாம் என நிபுணர்கள கணித்துள்ளனர்.

ஏயு ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
லிஸ்டில் இரண்டாவதாக பார்க்கவிருக்கும் பங்கு ஏயு ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகும்.
இதன் அசெட் தரமானது தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில் இந்த நிதி நிறுவன பங்கின் கடன் வளர்ச்சியானது இனி வரும் காலாண்டில் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இதன் வளர்ச்சி விகிதம் மேம்படலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பங்கின் இலக்கு விலைஉயாக 848 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளனர். இதன் விலையானது தற்போதைய லெவலில் இருந்து 38% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூபிலண்ட் இங்க்ரீவியா
தற்போதைய நிலையில் இந்த கெமிக்கல் பங்கு விலையானது, மற்ற போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது தள்ளுபடி விலையில் வர்த்தகமாகி வருகின்றது. ஆக தற்போதைய விலையில் இருந்து இந்த பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள்; நம்புகின்றனர். இப்பங்கின் விலையனாது தற்போதைய லெவலில் இருந்து 50% அதிகரிக்கலாம் என்றும் மதிப்பிட்டுள்ளனர். இதன் இலக்கு விலை 700 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.

ஓபாராய் ரியால்டி
நடப்பு ஆண்டில் ஹோட்டல்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கத்தினால் சரிவினைக் கண்ட நிறுவனங்கள், தற்போது தான் அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் இந்த பங்கின் விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
ஓப்ராய் கடந்த 2017ல் இருந்து 5.4% ஆக இருந்த சந்தை பங்கானது, 11.2% ஆக அதிகரித்துள்ளது.ஓப்ராய் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம். இந்த பங்கின் இலக்கு விலையானது 1000 ரூபாயினை தரகு நிறுவனம் கணித்துள்ளது. இது தற்போதைய விலையில் இருந்து 30% மேலாக ஏற்றம் கண்டுள்ளது.