டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பின் விளைவாக, சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் என்ற அபாயம் மற்றும் அமெரிக்கா மந்தநிலைக்குள் செல்லும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் பலத்த சரிவை சந்தித்து வருகின்றன. இந்திய பங்குச் சந்தைகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 3,900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. பெரும்பாலான பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது.
இது போன்ற சூழ்நிலைகளில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்குவர். ஆனால் பொதுவாக பங்குச் சந்தை சரிவின்போது தான் துணிந்து முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்நிலையில், அடுத்த 12 மாதங்களில் நல்ல ஆதாயம் தர வாய்ப்புள்ள சில்லரை விற்பனை, லாஜிஸ்டிக்ஸ், வர்த்தக வாகனம் ஆகிய 3 துறைகளை சேர்ந்த 3 நிறுவன பங்குகளை பங்கு தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. அந்த பங்குகளை பார்ப்போம்.

டிரெண்ட்
டாடா குழுமத்தை சேர்ந்த சில்லரை விற்பனை சங்கிலித்தொடர் நிறுவனம் டிரெண்ட். தரகு நிறுவனமான ஆன்டிகியுக், டிரெண்ட் நிறுவனம் தொடர்பான தனது மதிப்பீடான வாங்கலாம் என்பதை தொடர்ந்து பராமரிக்கிறது. அதேசமயம் டிரெண்ட் நிறுவன பங்கின் இலக்கு விலையை ரூ.6,801ஆக குறைத்து நிர்ணயம் செய்துள்ளது. முன்பு இலக்கு விலையை ரூ.7,363ஆக மதிப்பீட்டு இருந்தது.கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தக முடிவில் இப்பங்கின் விலை ரூ.5,561.25ஆக இருந்தது.ஆக வரும் மாதங்களில் இப்பங்கின் விலை கடந்த வர்த்தக தின முடிவு விலையை காட்டிலும் 22 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லிவரி
நாட்டின் மிகப்பெரிய முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்கும் நிறுவனம் டெல்லிவரி. இந்நிறுவனம் தற்சமயம் நாட்டில் மொத்தமுள்ள பின் கோடு உள்ள ஊர்களில் 97 சதவீத ஊர்களில் இந்நிறுவனம் சேவை வழங்கி வருகிறது. பங்கு தரகு நிறுவனமான எம்கே, டெல்லிவரி நிறுவனத்துக்க வாங்கலாம் என்ற மதிப்பீட்டை அளித்துள்ளது. மேலும் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.400ஆக நிர்ணயம் செய்துள்ளது. இது கடந்த வர்த்தக தினத்தில் முடிந்த இப்பங்கின் விலையிலிருந்து 55 சதவீதம் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது.கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தக முடிவில் இப்பங்கின் விலை ரூ.258.25ஆக இருந்தது.
அசோக் லேலண்ட்
அசோக் லேலண்ட் நாட்டின் முன்னணி பயணிகள் மற்றும் வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். தரகு நிறுவனமான இன்க்ரெட் ஈக்விடீஸ், அசோக் லேலண்ட் நிறுவன பங்குக்கு ADD என்ற மதிப்பீட்டை வாங்கலாம். அதாவது இந்த பங்குகளை கூடுதலாக வாங்கி சேர்க்கலாம். இப்பங்கின் விலையை ரூ.265ஆக நிர்ணயித்துள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தக முடிவில் வர்த்தகம் செய்யப்பட்ட ரூ.205.35 என்ற விலையிலிருந்து 29 சதவீதம் அதிகரிக்கும் என்பதற்கான வாய்ப்புகளை குறிக்கிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

நாளை பங்குச் சந்தை ஏற்றம் காணுமா? சரியுமா? சந்தையை தீர்மானிக்கப் போகும் 3 முக்கிய காரணிகள்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications